சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அன்றாம் இரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் படிப்படியாக விலை குறைந்து சவரன் 90,000 ரூபாய்க்கும் கீழ் சென்ற நிலையில், மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. அதிலும் இன்று ஒரே நாளில் இருமுறை விலை உயர்ந்து, சவரனுக்கு மொத்தம் 1,440 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கத்தின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

Continues below advertisement


மக்களுக்கு ஆட்டம் காட்டி வரும் தங்கம்


தங்கத்தின் விலை மக்களுக்கு பெரும் தலைவலியாகவே மாறிவிட்டது என்றே கூறலாம். ஆம், அந்த அளவிற்கு அன்றாடம்  விலை கூடுவதும், குறைவதுமாய் உள்ளது. கடந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 3-ம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராம் 11,350 ரூபாயாகவும், சவரன் 90,800 ரூபாயாகவும் இருந்தது.


இந்நிலையில், 4-ம் தேதி விலை குறைந்து, ஒரு கிராம் 11,250 ரூபாய்க்கும், ஒரு சவரன் 90,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தொடரந்து, 5-ம் தேதி மேலும் விலை குறைந்து, ஒரு கிராம் 11,180 ரூபாய்க்கும், ஒரு சவரன் 89,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


ஆனால், அடுத்த நாளான 6-ம் தேதியே விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,320 ரூபாய்க்கும், ஒரு சவரன் மீண்டும் 90 ஆயிரத்தை கடந்து, 90,560 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து, 7-ம் தேதி விலை குறைந்து, ஒரு கிராம் 11,270 ரூபாயாகவும், ஒரு சவரன் 90,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.


தொடர்ந்து, 8-ம் தேதி மேலும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,300 ரூபாயாகவும், ஒரு சவரன் 90,400 ரூபாயாகவும் விற்பனையாது. 8-ம் தேதியான ஞாயிற்றுக் கிழமை அதே விலையில் நீடித்த தங்கம், 9-ம் தேதியான இன்று ஒரே நாளில் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.


தங்கத்தின் இன்றைய விலை


அதன்படி, இன்று காலை சவரனுக்கு 880 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 91,280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 110 ரூபாய் விலை உயர்ந்து 11,370 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.


இந்நிலையில், மாலையில் மீண்டும் சவரனுக்கு 560 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 91,840 ரூபாய்க்கும், கிராமிற்கு 70 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம்  11,480 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


வெள்ளியின் விலையும் உயர்வு


இதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்து, பின்பு தற்போது உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தின் முதல் நாளான 3-ம் தேதி வெள்ளியின் விலை கிராமிற்கு 168 ரூபாயாக இருந்தது. 4-ம் தேதி 3 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 165 ரூபாய்க்கு விற்பனையானது.


தொடர்ந்து, 5-ம் தேதி மேலும் 2 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 163 ரூபாய்க்கு சென்றது. ஆனால், 6-ம் தேதி 2 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் மீண்டும் 165 ரூபாய்க்கு சென்றது. அதைத் தொடர்ந்து, நேற்று, அதாவது 9-ம் தேதி வரை அதே விலையில் நீடித்தது.


இந்நிலையில், இன்று காலை வெள்ளியின் விலை கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்து, கிராம் 167 ரூபாய்க்கு சென்றது. பின்னர் மாலையில் மீண்டும் 2 ரூபாய் விலை உயர்ந்து, தற்போது வெள்ளி விலை ஒரு கிராம் 169 ரூபாக்கு சென்றுவிட்டது.


தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பொதுமக்களுக்கு தொடர்ந்து ஆட்டம் காட்டி வருவதால், அவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.