நடிகை கெளரி கிஷன் உடல் எடையை குறித்து யூடியூபர் ஆர்.எஸ் கார்த்திக் அநாகரீகமான முறையில் கேள்வி கேட்டது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சையில் கெளரி கிஷனுக்கு பரவலாக ஆதரவு பெருகிய நிலையில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார் அந்த யூடியூபர். ஆனால் இந்த வீடியோவில் அவர் தான் தவறு செய்ததாக ஒத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிட்டது. இதனைக் குறிப்பிட்டு இந்த மன்னிப்பை தன்னால் ஏற்க முடியாது என நடிகை கெளரி கிஷன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Continues below advertisement

கெளரி கிஷன் தவறா புரிந்துகொண்டார்

பத்திரிகையாளர் ஆர் எஸ் கார்த்தி வெளியிட்ட வீடியோவில்  ' கடந்த சில நாட்களாக நான் மன உளைச்சலில் இருக்கிறேன். நான் ஒரு விதத்தில் அவரிடம் கேள்வி கேட்டேன். அவர் அதை தவறாக புரிந்துகொண்டு முட்டாள்தனமான கேள்வி என்று சொன்னார். இதனால் அடுத்த பிரஸ் மீட்டில் அவரை நான் திருப்பி கேள்வி கேட்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  அது ஒரு ஜானியான கேள்வியாக கேட்கப்பட்டது. நான் அவர்களை உருவகேலி செய்யவில்லை. இந்த கேள்வியை அவர் தான் தவறாக புரிந்துகொண்டார். இந்த சர்ச்சையில் கெளரி கிஷன் எந்த விதத்திலாவது காயப்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்போது எல்லாரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்கிறபோது நானும் என்னுடைய நிலையில் இருந்து இறங்கி வந்து மன்னிப்பு கேட்கிறேன்" என்று அவர் பேசியிருந்தார்.

மன்னிப்பை ஏற்க முடியாது 

இந்த மன்னிப்பை ஏற்க முடியாது என தற்போது கெளரி கிஷன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " தன்னுடைய செயல்களின் விளைவுக்கு பொறுப்பெடுத்துக் கொள்ளும் எந்த ஒரு மன்னிப்பும் மன்னிப்பாக முடியாது. ' நான் உருவகேலி செய்யவில்லை. அவர் தப்பாக எடுத்துக்கொண்டார். சும்மா ஜாலியாக கேட்ட கேள்வி' போன்ற கருத்துக்களை சொல்லி தனது தவறை மறைக்க பார்க்கிறார். வெற்று வார்த்தைகளை என்னால் மன்னிப்பாக கருத முடியாது. இன்னும் பெட்டராக முயற்சி செய்யுங்கள் ஆர் எஸ் கார்த்திக்" என கெளரி பதிவிட்டுள்ளார்

Continues below advertisement