தங்கத்தின் விலை புத்தாண்டை ஒட்டி குறைந்த நிலையில், அதன் பிறகு தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது. இந்நிலையில், இன்றும் சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்து, புதிய வரலாற்று உச்ச விலையை அடைந்துள்ளது. தங்கத்தின் இன்றைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.
புத்தாண்டு முடிந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, புத்தாண்டு முடிந்த கையோடு ஏறுமுகத்திற்கு சென்றது. கடந்த வாரத்தின் முதல் நாளான 5-ம் தேதி ஒரு கிராம் 12,760 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,02,080 ரூபாயாகவும் இருந்த தங்கத்தின் விலை, 6-ம் தேதி விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,830 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,02,640 ரூபாய்க்கும் சென்றது.
7-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 8-ம் தேதி மேலும் விலை குறைந்து, ஒரு கிராம் 12,750 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,02,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, 9-ம் தேதி விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வார இறுதியில், அதாவது 10-ம் தேதி சனிக்கிழமை மேலும், விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,03,200 ரூபாய்க்கும் சென்றது. 11-ம் தேதி அதே விலையில் நீடித்தது.
இந்நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று, அதாவது 12-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,120 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,04,960 ரூபாய் என்ற புதிய உச்ச விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று வரலாற்று உச்ச விலையை அடைந்த தங்கம்
இந்த நிலையில், 13-ம் தேதியான இன்று, மேலும் விலை உயர்ந்து, புதிய வரலாற்று உச்ச விலையை அடைந்துள்ளது தங்கம். அதன்படி, கிராமிற்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,170 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,05,360 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலையும் புதிய உச்சம்
இதேபோல், வெள்ளி விலையும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த வார தொடக்கத்தில், அதாவது, 5-ம் தேதி ஒரு கிராம் தங்கம் 266 ரூபாயாக இருந்தது. 6-ம் தேதி விலை உயர்ந்து, ஒரு கிராம் 271 ரூபாய்க்கு எகிறியது. பின்னர், 7-ம் தேதி மேலும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 277 ரூபாயை எட்டியது.
பின்னர், 8-ம் தேதி விலை குறைந்து, ஒரு கிரம் 272 ரூபாய்க்கு வந்தது. தொடர்ந்து 9-ம் தேதியும் விலை குறைந்து, ஒரு கிராம் 268 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர், வார இறுதியில் விலை உயர்ந்து, 10 மற்றும் 11-ம் தேதிகளில் ஒரு கிராம் 275 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 12-ம் தேதியான நேற்று அதிரடியாக கிராமிற்கு 12 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 287 ரூபாயாக உச்சம் தொட்டது.
இந்நிலையில், இன்று கிராமிற்கு மேலும் 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 292 ரூபாய் என்ற உச்ச விலையை எட்டியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய உச்சங்களை தொட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். வரும் நாட்களில் எந்த அளவிற்கு விலை உயருமோ என்ற அச்சம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது.