ஏப்ரல் 1-ம் தேதியான இன்று, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளன. தங்கம் சவரனுக்கு 3,040 ரூபாயும், வெள்ளி கிராமிற்கு 15 ரூபாயும் உயர்ந்துள்ளன. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

Continues below advertisement

அதிர்ச்சி கொடுத்த தங்கம்

தங்கத்தின் விலை கடந்த 25-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,08,800 ரூபாய்க்கு எகிறியது. தொடர்நது, 26-ம் தேதி அதிரடியாக விலை குறைந்து, ஒரு கிராம் 13,350 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பின்னர், 27-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,430 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,07,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. பின்னர் வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 28-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,660 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,280 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமையான 29-ம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Continues below advertisement

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான 30-ம் தேதி காலையில், தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,08,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதன்படி, கிராமிற்கு 170 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,10,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில் நேற்று காலையிலேயே தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 100 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,670 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை என்ன.?

அதன்படி, தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 380 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,040 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,12,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

இந்த நிலையில், வெள்ளியின் விலையும் கூடுவதும் குறைவதுமாக உள்ளது. கடந்த 25-ம் தேதி கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 26-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 27-ம் தேதி கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

பின்னர் வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 28-ம் தேதி கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 29-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது. இந்த நிலையில், வெள்ளியின் விலை 30-ம் தேதி காலையிலும் மாற்றமின்றி கிராம் 250 ரூபாய் என்ற விலையிலேயே நீடித்தது. ஆனால், மாலையில் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று காலையிலேயே கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த சூழலில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.