வரும் 9ம் தேதி சென்னையில் ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கின்றன. இந்தப் போட்டி வரும் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக, சென்னை அணி சில தினங்களுக்கு மும்பை சென்றது. அங்கு வீரர்கள் போட்டிக்காக, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதிய ஜெர்ஸியுடன் நியூ லுக் இருக்கிறார் தோனி. அத்துடன், ‘Baadshah Of Super Smiles!’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளது. தோனியின் புதிய புகைப்படத்தை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Baadshah
Of
Super
Smiles!#WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/CpzZnMStVO
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2021