சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் நேற்று ரூபாய் 4 ஆயிரத்து 542க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்து 336க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5 குறைந்து ரூபாய் 4 ஆயிரத்து 537க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 40 குறைந்து ரூபாய் 36 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
24 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 945க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 39 ஆயிரத்து 560க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு 50 காசு குறைந்து ரூபாய் 65.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 65 ஆயிரத்துக்கு 500க்கு விற்கப்படுகிறது.
முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, பொருளாதார மந்தமான சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். மேலும் படிக்க: ஓலாவின் முதல் ஊழியர் பிரனாய் தொடங்கிய ஸ்டார்ட்-அப்… ஆண்களின் பாலியல் நலனுக்கான App-இன் பெயர் தெரியுமா?
அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.
காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என்றும் அவர் கூறினார். மேலும் படிக்க: Aavin Fuel Station: ஆவின்ல பெட்ரோல் கிடைக்கும்.! இதுதான் ஆவின் பெட்ரோல் பங்க்.. ஆனா இது புதுசில்ல!!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்