அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேட்கப்பட்ட தொகுதிகளை ஒதுக்காததால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


தேமுதிக மாவட்ட செயலாளார்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.




போதுமான தொகுதிகளை ஒதுக்காத அதிமுகவோடு கூட்டணி வேண்டாம் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. குறிப்பாக தேமுதிகவுக்கு வெறும் 10க்கு கீழ் இடங்களை ஒதுக்கவே அதிமுக முன்வந்ததாகவும் கட்சி தலைமை மாவட்ட செயலாளர்களிடம் கூறியது. இதனையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது.