தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் “அதிமுக ஆட்சியில் சிங்கார சென்னை தற்போது குப்பையாக மாறியிருக்கிறது. மாஸ்க், பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல கோடி கொள்ளை நடந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் பணப் பலன்கள் முறையாக வழங்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்ததும் குறைந்த கட்டணத்தில் இயங்கும் பேருந்துகள் கொண்டு வரப்படும்” என்றார். 


 






மேலும் பேசிய ஸ்டாலின் “அதிமுகவை வீழ்த்த நான் அவதாரம் எடுக்க தேவையில்லை, நான் நானாக இருந்தாலே போதும். அதிமுகவை கரையான்போல் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அரித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் பல தொழில் நகரங்கள் நொடிந்து போனதற்கு ஜிஎஸ்டிதான் காரணம் என குற்றம் சாட்டினார். தேர்தலுக்காக முதல்வர் பழனிசாமி சமூகநீதி வேடம் போடுகிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் சமூகநீதியை கொடுப்போம். நான் வீட்டுக்கு விளக்காகவும், நாட்டுக்கு தொண்டனாகவும் இருப்பேன்” என்றார்.