Diwali Muhurat Trading:தீபாவளி முகூர்த்த வர்த்தக நேரம்; எப்போது தொடங்கும்?விவரம்!

Diwali Muhurat Trading 2024 Date: தீபாவளிப் பண்டிகை கால முகூர்த்த வர்த்தகம் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

Continues below advertisement

முகூர்த்த டிரேடிங் நாளில் வர்த்தகம் செய்தால் ஆண்டு முழுவதும் லாபகரமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தாண்டு தீபாவளி முகூர்த்த வர்த்தக நேரம் வரும் நவம்பர் 1-ம் தேதி மாலை 6.15 மணி முதல் 7:15 வரை முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

முகூர்த்த நாள் என்பதால் நவம்பர் -1ம் தேதி பங்குச்சந்தை முழு நாளும் செயல்படாது. முகூர்த்த நாள் என்பதால் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நேரத்தில் பங்குச்சந்தையில் வர்த்தகம் நடைபெறும். அப்போது எந்தெந்த பங்குகளை வாங்கலாம் என்பதை நிபுணர்களின் ஆலோசனை பெற்று செயல்படலாம்.

தீபாவளி முகூர்த்த சிறப்பு டிரேடிங்

ப்ரீ ஓப்பன் செஷனாக 15 நிமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 6 மணி முதல் 6.15 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. block deal window மாலை 5.45 மணிக்கு திறக்கப்படும். 6 மணி வரை நடைபெறும். 

வழக்கமான சந்தை அமர்வு 6.15 மணி முதல் 7.15 மணி வரை நடைபெறும். வர்த்தக மாற்றத்தை ( trade modification) 7.25 மணி வரை மேற்கொள்ளலாம். கடைசியாக நிறைவு அமர்வு (closing session) இரவு 7.25 மணி முதல் 7.35 மணி வரை நடைபெறும்.   

நல்ல தொடக்கம்

இந்த நேரத்தில் பங்குகளை வாங்குவது அல்லது விற்பனை செய்வது என எதுவானலும் அது நிறைவான வளத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. 

 கடந்த 10 சிறப்பு முகூர்த்த வர்த்தக நாட்களில்,7 அமர்வுகளில் சென்செக்ஸ், நிப்டி ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு ஒன்றின் விலை ரூ.3,500 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெலிகாம் நிறுவனங்களின் விலை உயர்வு, ரீடெயில் தொழில் துறை மீண்டுள்ளது ஆகியவற்றின் காரணமாக ரிலையன்ஸ் பங்கு வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவர்கிரிட் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா:

பவர்கிரிட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினாலும் நல்ல பலன் கிடைக்கும். இதன் விலை ஒன்று ரூ.383 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி நிஃப்டி 26,216 ஆக உயர்ந்து புதிய சாதனை படைத்தது. முகூர்த்த நேரத்திலும் சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகூர்த்த நேரத்தில் கவனத்துடன் பங்குகளை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்படுள்ள பங்குச்சந்தை வர்த்தகம் பற்றிய பரிந்துரைகள் நிபுணர்களின் கருத்து மட்டுமே. ABP நாடு நிபுணர்களின் தெரிவித்த தகவலை மட்டும் வழங்குகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola