ஜூலை ஒன்றாம் தேதி முதல் டோக்கனைஷேசன் முறைக்கு வரும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள். டோக்கனைஷேசன் முறைக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பதிவு செய்து பயன்படுத்துவது எப்படி என இங்கே பார்க்கலாம்..


வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் டோக்கனைஷேசன் முறைக்கு வரவுள்ளன. இதற்குப் பிறகு அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்பாடு எனபது டோக்கனைஷேசன் முறையின்படிதான் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


இந்த டோக்கனைஷேசன் முறை அமல்படுத்தப்பட்ட பின்னர், பணப் பரிவர்த்தனை, பணத்தினை திரட்டுவது மற்றும் வணிக ரீதியான அனைத்து நடவடிக்கைகளிலும் மாற்றம் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


டோக்கனைஷேசன்  


வாடிக்கையாளர்கள் வணிகத் தளங்கள் போன்ற இடங்களில் பொருட்கள் வாங்கும்போது, வாடிக்கையாளரின் டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகள் பற்றிய தகவல்களை சேமித்து தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதை கண்டறிந்த ரிசர்வ் வங்கி, வணிகத் தளங்கள் கார்டுகளின் தகவலை சேமிக்க கூடாது என உத்தரவிட்டது. அதோடு மட்டுமிலாமல், டோக்கனைஷேசன் எனும் புதிய முறையினை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தது. டோக்கனைஷேசன் என்பது, கார்டு நெம்படுக்கு பதிலாக மற்றொரு மாற்று நெம்பரை தருவதாகும். அதாவது பொருட்கள் வாங்கும்போது கார்டு பற்றிய தகவலைக் கேட்டால் அதற்கு டோக்கனைஷேசன் முறையின் மூலம்  தற்காலிக மாற்று எண் உருவாக்கப்பட்டு பணப் பரிவர்த்தனை செய்யப்படும்.  இதனால் வாடிக்கையாளரின் தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 


டோக்கனைஷேசன் மூலம் தகவலை பாதுகாப்பது எப்படி?


1. பொருட்கள் வாங்கும் தளத்திற்கு சென்று பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டும்


2. பின்னர், தளத்திற்கு வெளியில் வந்து, சிவிவி மற்றும் கார்டின் எண்ணை தருவதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்


3. அந்த பக்கத்தில் இருக்ககூடிய ‘செக்யூர் கார்ட்’ எனும் ஆப்ஷனை க்ளிக் செய்து அங்குள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். 


4. ரிஜிஸ்ட்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபியை நிரப்பிட வேண்டும். 


5. மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை சரியாக பின்பற்றினால் உங்கள் கார்டின் தகவல்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். 


டோக்கனைஷேசன் மூலம் தகவலை பாதுகாக்கவில்லை என்றால் என்ன நிகழும்?


கார்டின் தகவல்களைக் கொண்டு வணிகத் தளங்கள் தவறாக அல்லது முறைகேடாக பணத்தினை பரிவர்தனை செய்ய முடியும். 


மேலும் இந்த டோக்கனக்‌ஷேசன் முறை என்பது முற்றிலும் உள்நாட்டு வணிகத்திற்கு மட்டுமே தானே தவிர, வெளிநாட்டு பணப்பரிவர்தனைக்கு இந்த டோக்கனைஷேசன் முறை பொருந்தாது. 


ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை பிறப்பித்திருந்தாலும், தந்து கார்டினை டோக்கனைஷேசன் முறையில் பதிவு செய்வது முழுக்க முழுக்க தனிப்பட்ட விருப்பம் எனவும் தெரிவித்துள்ளது.