வாடிக்கையாளர்களின் தரவுகளைச் சேமிப்பதில் விதிமுறைகளை மீறியதன் காரணமாக, மாஸ்டர் கார்டு நிறுவனம் இனி புதிய வாடிக்கையாளர்களுக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்க முடியாது எனவும், ஜூலை 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கை முறைகளும் மாறிவருகிறது. குறிப்பாக வங்கிகளில் பணம் எடுப்பதற்கு வரிசையில் நின்ற காலங்கள் மறந்து தற்பொழுது ஏடிஎம் மையங்களைத்தான் நாம் அணுகிறோம். இதோடு மட்டுமின்றி ஷாப்பிங் செய்வதற்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.  பொதுவாக வங்கிகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூபே, விசா, மாஸ்டர் போன்ற டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இதனை ஏடிஎம் கார்டு என்றே அனைவரும் அழைக்கும் பழக்கம் உண்டு. இந்நிலையில் தற்பொழுது ரூபே, விசா, மாஸ்டர் என்றால் என்ன? எப்படி செயல்படுகிறது? என தெரிந்துகொள்வதோடு ஏன் மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது என அறிந்துகொள்வோம்.




ரூபே, விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளை மக்கள் அதிகளவில் தற்பொழுது பயன்படுத்தும் Payment networking gateway சிஸ்டம் ஆகும். இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் விபரங்கள் இதில் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான்  நாம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் பணம் எடுக்கும் பொழுது விபரங்களை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அதன் பின் பணம் எடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறைதான் தற்பொழுது banking system  என்ற பெயரில் ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி நடைமுறைப்படுத்தப்படுகிறது.


 இந்நிலையில் தான் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுளை விநியோகம் செய்யும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புகளை உள்ளடக்கிய சர்வர் இந்தியாவில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால்  ஆனால் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேமிப்பதில் மாஸ்டர் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதாகவும், இந்நிறுவனத்திற்கு அதிகமான அவகாசம் மற்றும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டப் போதிலும் பணம் செலுத்தும் முறை தொடர்பானத் தரவுகளை சேமிக்கும் சர்வர்களை இந்தியாவில் வைக்கவில்லை.



இதனையடுத்து தான் தற்பொழுது ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின் படி, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறையினை ஜூலை 22 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதோடு ஏற்கனவே மாஸ்டர் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தத் தடையும் கிடையாது எனவும் வழக்கம் போல இந்த கார்டுகளை தொடர்ந்து அவர்கள் உபயோகிக்கலாம் என தெரிவித்துள்ளது. குறிப்பாக விசா மற்றும் மாஸ்டர் கார்டு அமெரிக்க நிறுவனங்களாக உள்ள நிலையில், இந்தியாவில் அறிமுகமாகியது ரூபே எனப்படும் Payment networking gateway ஆகும். கிராமப்புற வங்கிகளிலும் இதன் சேவையினை கொண்டுவர வேண்டும் என்பதற்காக rupay Indian domestic gateway செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.