புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஸ்ரீவள்ளி பாடலின் நடனம் உருவான விதம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்த படம் புஷ்பா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் கடந்தாண்டு டிசம்பரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலில் மாபெரும் சாதனைப் படைத்தது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகத்திற்கு புஷ்பா தி ரைஸ் என்றும், 2 ஆம் பாகத்திற்கு புஷ்பா தி ரூல் எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். முதல் பாகம் மெகா ஹிட் ஆன நிலையில் 2 ஆம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு புஷ்பா எப்படி டான் ஆகிறார் என்பதே இப்படத்தின் முதல் பாக கதையாக அமைந்தது. 2ஆம் பாகத்தில் புஷ்பாவின் செல்வாக்கு எப்படி இருக்கும் என தெரிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே இப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய ஸ்ரீவள்ளி பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக அதில் அல்லு அர்ஜூனின் நடனம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த காட்சியில் அல்லு அர்ஜூன் செருப்பை கழண்டு விழும் நிலையில் நடனமாடியிருப்பார். இதனைப் பலரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் செய்து மகிழ்ந்தனர்.
இதனிடையே சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட குரோர்பதி நிகழ்ச்சியில் இந்த பாடலின் சீக்ரெட் குறித்து அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். ஒருமுறை ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தபோது ஸ்ரீவள்ளி பாடலில் செருப்பு நகர்வு எப்படி நடந்தது? அது தற்செயலாக நடந்ததா அல்லது நடனமா என கேட்டேன். அதற்கு அவர், அல்லு அர்ஜுன் தற்செயலாக தனது செருப்பை தவறவிட்டதால் அது நடனமாக மாறிவிட்டதாகவும், இந்த பாடல் ஒலிக்கும்போதெல்லாம், மக்கள் தங்கள் செருப்புகளை கழற்றி அதனைப் போல் செய்வது வாடிக்கையாகி விட்டதாக தெரிவித்தார் என கூறியுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்