விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரை பார்த்தவுடன் தனது முதல் ரியாக்ஷன் என்னவென்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரை பற்றி தெரிந்தவுடன் நான் முதலில் கேட்டது எப்படி இதப் பண்ண ஒத்துக்கிட்ட என்பதுதான்.
உடனே அவர் சொன்னார், நான் ரொம்ப நாளா ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்று நினைச்சேன். ஆனால் அது கமல் சாருக்காக அமையும்னு நினைக்கலை. கமல் சாருக்கு என் அன்பையும், மரியாதையையும் வேறு எப்படி தெரிவிப்பது என்று எனக்குத் தெரியல என்றார். இதுக்கு அப்புறம் தான் நான் திரையில் பார்க்குறேன். பார்த்துட்டு வந்ததும் என்னப்பா இது டெரரா இருக்குன்னு சொன்னேன். ஏன்னா அவர் நிறைய விஷயங்களை பிரேக் பண்ணியிருந்தார். வில்லனாக நடித்திருந்தார். ஸ்க்ரீனில் சிகரெட் பிடித்தார், கொடூர வசனங்கள் பேசினார். ரொம்பவே டெரரா இருந்தார். அது என்னமோ பண்ணனும்னு தோனுச்சு பண்ணேன் என்றார்.
அவரை ஸ்க்ரீனில் பார்த்த மொமன்ட் பயங்கரமாக இருந்தது என்றார். ஆனா எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். அண்ணன் அந்தப் படத்தில் நடிப்பதே தெரியாமல் இருந்திருக்க வேண்டும்னு நினைக்கிறேன். அப்படின்னா மற்ற ரசிகர்கள் போல் நானும் அந்த தருணத்தை முழுசா ரசிச்சிருப்பேன். அந்த சஸ்பென்ஸ் இன்னும் டெரரா இருந்திருக்கும்" என்றார்.
விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார் நடிகர் கமல். இது குறித்து பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம் இது. நன்றி அண்ணா என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனக்கு லவ் சீன் தான் கஷ்டம்:
மணிரத்னம் இயக்கத்தில் தான் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி நடிகர் கார்த்தி பேசுகையில், எனக்கு அந்தப் படத்தில் ஆக்ஷன் சீன் கஷ்டமாக இல்லை. லவ் சீன் தான் கஷ்டமாக இருந்தது. நான் நந்தினி, பூங்குழலி என எல்லோரையும் ரூட் விடும் கேரக்டராக நடிக்க வேண்டும். அந்த லவ்வர் பாய் மூட் கொண்டுவருவது தான் ரொம்பவே கஷ்டமாக இருந்தது என்றார்.
மேலும் அந்தப் பேட்டியில் தனக்கும் தன் அண்ணனுக்கும் வீட்டில் சிறு வயதில் ஷூ, ட்ரெஸ், பைக் என எல்லாவற்றிற்கும் சண்டை வரும் ரசித்துக் கொண்டே சொன்னார்.
ரிலீஸுக்கு காத்திருக்கும் விருமன்...
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது. படமும் தோல்வியை தழுவியது.
அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்