உலக அளவில் பிட்காயின் மதிப்பு கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் உயர்ந்துள்ள பணவீக்கம் எதிரொலியால் பிட்காயின் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் மதிப்பு 8 சதவீதம் அல்லது 1,304 டாலாராக குறைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மிகவும் பிரபலமான ஏத்தரின் மதிப்பு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரிப்டோவகைளில் பிற காயின்கலான ஸ்டெல்லர், யுனிஸ்வாப், எஸ்ஆர்பி, ட்ரான், டீதர், சோலனா, போல்காடாட், அவலான்ஜி, பாலிகான், செயின்லிங்க், டெரா லுனா கிளாசிக், கார்டானா, லைட்காயின் ஆகியவற்றின் மதிப்பும் கடந்த 24 மணிநேரத்தில் 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கிரிப்டோ கரன்சியும் உலக அளவிலான சந்தை முதலீடு நேற்று 1.10 டிரில்லியன் டாலரில் இருந்து 1.02 டிரில்லியன் டாலராக சரிவடைந்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கிரிப்டோ கரன்சி ரிஸ்கிலிருந்து தள்ளி இருக்க விரும்புகின்றனர். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிப்டோ கரன்சிகளில் பிரபலமான பிட்காயின் Ethereum உள்பட 25,586 அமெரிக்க டாலர் வரை சரிவடைந்துள்ளது.
Ethereum எனும் பிட்காயின் 14 மாதங்களில் இல்லாத வகையில் 1350 டாலருக்கு வர்த்தமாகிறது. இதன் மதிப்பு மேலும் குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். Solana என்ற நிறுவன பிட்காயின் மதிப்பு 30 சதவீதம் குறைந்துள்ளது.
அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ஒருமுறை பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியது. ஆனால், அது எந்த பலனையும் தரவில்லை. இந்நிலையில், பணவீக்கம் உயர்ந்ததையடுத்து கடுமையாக வட்டி விகிதத்தையும் 50 முதல் 75 புள்ளிகள் வரை உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிட்காயின் ஒன்று 25,000 அமெரிக்க டாலருக்கும் Ethereum 1300 அமெரிக்க டாலருக்கும் விற்பனையாகி வருகிறது.
கிரிப்டோ எக்ஸ்சேஞ் தலைமை செயல் அதிகாரி இது குறித்து கூறுகையில், “ பெட்ரோல் , டீசல், விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பலவேறு காரணங்களுக்காக கிரிப்டோ கரன்சியின் மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது.” என்றார்.
பிட்காயின் மதிப்பு இன்னும் சரிவைச் சந்திக்கும் என்று கிரிப்டோ கரன்சி நிபுணர்கள் கூறுகின்றனர். சிறந்த முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பிட்காயினின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது முதலீட்டாளர்கள் இடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்