நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ள நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் 9 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூபாய் 200 மானியமாக வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதன்மூலம் நாடு முழுவதும், 9 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், விரைவில் சிமெண்ட் விலை குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ரூபாய்க்கும் 8-ம், டீசல் விலை ரூபாய்க்கும் 6-ம் கலால் வரியை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்