நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 


இந்நிலையில் மக்களவையில் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அதில் ,இந்த நிதியாண்டில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G இணையச் சேவையை வழங்கும் வகையில் அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்று தகவல் தெரிவித்தார். அப்பொழுது, பி.எஸ்.என்.எல். நிலை என்ன? அதற்கு 5ஜி அலைக்கற்றை இல்லையா என எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.


 


 






 


இதன்மூலம், தொலைத்தொடர்பு மற்றும் 5G தொழில்நுட்பம், குறிப்பாக, வளர்ச்சியை செயல்படுத்தி வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும், உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக 5G க்கு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வடிவமைப்பு-தலைமையிலான உற்பத்திக்கான திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். 


கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் மலிவு விலையில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் சேவை பெருக்கத்தை செயல்படுத்த உலகளாவிய சேவை கடமை நிதியின் கீழ் ஆண்டு வசூலில் 5% ஒதுக்கப்படும். "இது R&D மற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளின் வணிகமயமாக்கலை ஊக்குவிக்கும். 


மேலும் படிக்க:வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? பட்ஜெட்டில் உங்களுக்கு சொன்னது இதுதான்!


நகர்ப்புறங்கள் மற்றும் அவற்றின் குடியிருப்பாளர்களைப் போலவே அனைத்து கிராமங்களும், அதன் குடியிருப்பாளர்களும் மின் சேவைகள், தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் டிஜிட்டல் வளங்களைப் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்று தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


மேலும் படிக்க:  Union Budget 2022 Highlights in Tamil: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண