நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில் சில முக்கியமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி இந்தியாவில் வரும் 2022-23ஆம் நிதியாண்டில் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாஸ்போர்ட் பெறுவதற்கு மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகவும் எளிதாகவும் அமையும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை இந்தியாவில் பாஸ்போர்ட் பெற முதலில் பாஸ்போர்ட் சேவை மையத்தில் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு நேரில் சென்று நம்முடைய ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் பெற முடியும். இந்த முறையை விரைவில் அரசு டிஜிட்டல் மயமாக்க உள்ளது. அதன்படி டிஜிட்டல் மூலம் விண்ணப்பிப்பது மற்றும் பாஸ்போர்ட் பெறுவது ஆகியவற்றை மத்திய அரசு தொடங்க உள்ளது.
மேலும் பட்ஜெட் அறிவிப்பில் வரும் 2022-23 நிதியாண்டில் ப்ளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். இதை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரே வகுப்பு ஒரே செனல் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 12 முதல் 200 கல்வி செனல் தொடங்கப்படும். அவற்றை அந்தந்த மாநிலங்கள் மாநில மொழியில் மாற்றி கல்வி கற்க பயன்படுத்தி கொள்ளலாம்.டிஜிட்டல் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு 30 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனிமேல் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 30 சதவிகித வரி விதிக்கப்படும்.
2022-23 மத்திய பட்ஜெட்டில் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணத்தில் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைப்பதாகவும் அறிவித்தார்.அப்பொழுது, ஜிஎஸ்டி வசூலுக்கான ஆரோக்கியமான குறிகாட்டியாக இதைக் கருதலாம் எனவும், 2022 ஜனவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாக உள்ளது. இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்ட ஆண்டுகளில் இருந்து அதிகபட்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: Union Budget 2022 Highlights: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!