நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இரு அவைகளின் கூட்டத்தில் பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் “கற்க கசடற” என தொடங்கும் திருக்குறளை சுட்டிக் காட்டி புதிய கல்வி கொள்கை குறித்து பேசினார். அவரை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் 27 முறை தமிழகம் என்ற சொல் இடம்பெற்றது. இன்று நிர்மலா சீதாராமன் தனது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்தநிலையில், எப்பொழுதும் தமிழ் மற்றும் தமிழின் மிகப்பெரிய இலக்கியங்களான திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடிகளில் இருந்து வரிகளை எடுத்து முன்னுதாரமாக தெரிவிப்பார். அதேபோல், இந்தாண்டும் தமிழ் சார்ந்த ஏதாவது ஒரு இலக்கியங்கள் முன்னுதாரமாக சொல்லப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக மகாபாரதம் 18 பருவங்களில் பன்னிரண்டாவது பருவமான சாந்தி பருவத்தை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார்.
இந்த ஆண்டு வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்து, அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டும்போது அரசை எப்படி வழிநடத்த வேண்டும் என பீஷ்மர் வழங்கிய அறிவுரை இந்த பருவத்தில் இடம்பெற்றுள்ளது. அதில், மன்னன் எந்தவொரு ஆசையையும் துறந்து, தர்மத்திற்கு வழியில் அரசை ஆளவும், அதே வழியில் மக்களிடம் வரிகளை வசூலித்து மக்களின் நலனுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு, 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, “ இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்ற குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
அதேபோல அப்போது, பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து என்ற குறளையும் சுட்டிக்காட்டினார்
2020-ம் வருடத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது "பூமி திருத்தி உண்" என ஆத்திச்சூடி மேற்கோளுடன் பேசினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.2019 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கலின்போது புறநானூற்றிலிருந்து பிசிராந்தையாரின் யானை புக்க புலம் போல என தொடங்கும் பாடலை மேற்கோள்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்