Union Budget 2022 LIVE:மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், தனிநபர் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
Union Budget 2022 India LIVE Updates Tamil: 2017ஆம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிப்பு - நிர்மலா சீதாராமன்
பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி வருமானங்களுக்கு 30% வரிவிதிக்கப்படும்.
புதிய பொதுத்துறை கொள்கையின் அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக பங்குதாரருக்கு மாற்றப்பட்டுவிட்டது. அடுத்தது இந்த திட்டத்தில் இருப்பது LIC நிறுவனம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 முதல் 12-ஆம் வகுப்பு வரை, மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
நாடுமுழுவதும் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகபடுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல், போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா முறையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
2022-23ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டையும், தனது 4வது நிதி நிலை அறிக்கையையும் மக்களவையில் தாக்கல் செய்யத் தொடங்கினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்2022-23க்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஒப்புதலை அடுத்து பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றம் வந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். இன்னும் சிறிது நேரத்தில் பட்ஜெட் தாக்கலாகிறது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Background
Union Budget 2022 LIVE Tamil:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் அச்சிடப்பட்ட பிறகு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும். அதன்பின்னர் குடியரசுத் தலைவரை சந்தித்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் ஒப்புதல் பெறுவார். அதன்பின்னர் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சில நாட்கள் நாடாளுமன்றம் கூட்டம் நடைபெறும். அதன்பின்னர் நாடாளுமன்ற கூட்டம் சில நாட்கள் ஒத்திவைக்கப்படும். அப்போது துறை ரீதியிலாக நாடாளுமன்ற நிலைக்குழு ஒவ்வொரு துறையின் மாணிய கோரிக்கை மீது விவாதம் நடத்தும். அந்த அறிக்கை மீண்டும் நாடாளுமன்றம் கூடிய பிறகு விவாதிக்கப்படும். கடைசியாக ஒவ்வொரு துறை ரீதியிலான கோரிக்கைகள் மக்களவையில் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் ஃபைனாஸ் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இத்துடன் மத்திய பட்ஜெட் முழுமையாக நிறைவேற்றப்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -