நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 


மேலும் படிக்க:வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? பட்ஜெட்டில் உங்களுக்கு சொன்னது இதுதான்!


இந்நிலையில் மக்களவையில் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அதில், நாடுமுழுவதும் 3 ஆண்டுக்குள் 18 லட்சம் வீடுகள் கட்ட 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் PMAY இன் கீழ் 60,000 வீடுகளுக்கு தகுதியான பயனாளிகளை அடையாளம் காணவும். 3.83 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் வழங்க ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 


 






தொற்றுநோய் காரணமாக, மனநலப் பிரச்சினைகள் பலருக்கு-குறிப்பாக இளைஞர்களுக்கு-உண்மையான பிரச்சினையாகிவிட்டன என்பதை நிதியமைச்சர் அங்கீகரித்து, தேசிய மனநலத் திட்டத்தை அறிவித்தார்.இதில் 23 தொலை மனநல மையங்களின் நெட்வொர்க் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


 


மேலும் படிக்க:  Union Budget 2022 Highlights in Tamil: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண