தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த குடும்ப தலைவிக்கான ரூ.1000 உரிமை தொகை குறித்தான அறிவிப்பு வெளியானது.
மகளிர் உரிமை தொகை- அண்ணாமலை
இந்நிலையில், இன்று நிதியமைச்சர் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், வரும் செப்டம்பர் 15 முதல் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என அறிவித்தார்.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது,
ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.