தமிழ்நாட்டின் 2022 -23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசி வருகிறார். அவரது பட்ஜெட் உரையில், அரசுப்பள்ளி அல்லாத பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்ப வரை தமிழ்வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்காக ரூபாய் 15 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.




நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது, “ தாய்மொழி கல்வியே தலைசிறந்த கல்வி என்பது அறிவியல் கூறும் உண்மையாகும். தமிழ் வழிக்கல்வியை ஊக்குவிக்கம் வகையில், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாடநூல், நோட்டுப்புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகள், அரசு நிதியுதவியின்றி செயல்பட்டு வரும், தமிழ் வழியில் மட்டும் பாடங்களை கற்பிக்கும் பள்ளிகளில் இலவசமாக 1 முதல் 10ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு, இந்தாண்டு முதல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.


எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று தமிழ் மொழியைப் போற்றி, அதனை உலகெங்கும் பரவச் செய்வதே இந்த அரசின் தலையாய குறிக்கோளாகும். தமிழ்மொழியின் தொன்மையையும், செம்மையையும் நிலைநாட்டிட பிற உலக மொழிகளுடன் தமிழின் மொழியில் உறவு குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்.




தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களை கொண்ட குழு ஒன்றை அமைத்து, அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இந்த திட்டத்திற்காக இந்தாண்டு வரவு- செலவுத்திட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.


பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய  மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். இந்த பணிகள் ரூபாய் 5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.”


இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.


TN Budget 2022 LIVE: ஜிஎஸ்டி.,யால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு... பட்டியலிடம் நிதியமைச்சர்... அதிமுகவினர் வெளிநடப்பு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண