தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் குறித்து ஆதரவு மற்றும் எதிர் கருத்தும் வைக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கையில் பட்ஜெட் குறித்தும் பேசினார்.
சிவகங்கையில் ப.சிதம்பரம் தலைமையில் சிவகங்கை , மானாமதுரை காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை பற்றிய கலந்துரையாடல் இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம்..,” தமிழ்நாடு பட்ஜெட்டில் கடன் வாங்கும் சுமையை குறைத்துள்ளனர். மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 6.9 % அடுத்த ஆண்டு 6.4 ஆனால் தமிழ்நாட்டின் அடுத்த ஆண்டு நிதி பற்றாக்குறை 3.8 % தான் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தி உள்ளனர். இதற்கு பாராட்டுக்கள்.
கல்வியும், சுகாதாரம் தான் நாட்டு மக்களுடைய முக்கிய தேவை. அதற்கு அதிக நிதி ஒதுக்கிய முதல்வர் மற்றும் நிதி அமைச்சருக்கு பாராட்டுகள். பெண் கல்விக்கு முக்கியத்துவம் மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து பட்டைய படிப்புபடிக்க முக்கியத்து ரூ.1000 அறிவித்துள்ளது, புரட்சிகரமான அறிவிப்பு. சுகாதாரத்துறையில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தலைமை மருத்துவமனை கட்டுவதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி ,சுகாதாரத் துறைக்கு செலவு செய்வது சமுதாய கட்டமைப்பு தான். தனியார் முதலீடுகளை பெறுவதற்கும் அரசு முதலீடு செய்து நிதி ஒதுக்கி அதன் மூலமும் வேலைவாய்ப்பு பெருகும் என்று நான் நம்புகிறேன். தேர்தல் அறிக்கை கூறியுள்ளது போல் நல்வாழ்வு ,வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு பாராட்டு.
நிதி மேம்பாடு வருவாய் பற்றாக்குறையில் 7000 கோடி வைத்திருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார் நிதிப்பற்றாக்குறை அடுத்தாண்டு 7 சதவீதம் குறையும் என்றும் அறிவித்திருக்கிறார் இது வெற்றிகரமான நிதி மேலாண்மையை காட்டுகிறது” என தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - PTR Budget Speech: தமிழில் அடிசறுக்கு... ஆங்கிலத்தில் அடிநொறுக்கு... பட்ஜெட்டில் அம்பி டு அந்நியனாக மாறிய பிடிஆர்!