திமுக அரசின் கடைசி தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதன் சிறப்பு ஹைலைட்ஸ் இதோ!
- ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் உருவாக்கப்படும்.
- புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மூன்றாம் பாலினத்தவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
- சென்னைக்கு அருகே புதிய நகரம் 2000 ஏக்கரில் உருவாக்கப்படும்.
- ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.
ஈட்டிய விடுப்புகளை சரண் செய்யும் நடைமுறை
- அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்புகளை சரண் செய்யும் நடைமுறை மீண்டும் அமல். இதன்மூலம் 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து, பணப் பலன் பெறலாம்.
- 20 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மடிக்கணினி அல்லது கைக்கணினி வழங்கப்படும்.
1 லட்சம் புதிய வீடுகள்
- கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் உருவாக்கப்படும்.
- பெற்றோர் இருவரையும் இழந்த 50 ஆயிரம் குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரை மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
- அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் உருவாக்கப்படும். 30 இடங்களில் ஒரு மையத்துக்கு தலா ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.
மெட்ரோ வழித்தடம்
- கோயம்பேடு- பட்டாபிராம் மற்றும் பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பாதையில் மெட்ரோ வழித்தடம் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும்.
- கடந்த 4 ஆண்டுகளில் 78,882 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் புதிதாக 40 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
- 2 ஆயிரம் தற்சார்பு தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
- ஓசுர், விருதுநகர் மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கப்படும்.
நவீன தொழில்நுட்ப படிப்புகள் அறிமுகம்
- அரசு பொறியியல் கல்லூரிகளில் ஏஐ, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.
- கருப்பைவாய் புற்றுநோயைத் தடுக்க 14 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் 700 பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோழி விடுதிகள் கட்டப்படும்.
தமிழ்நாட்டில் 160 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கத் திட்டம்
சென்னை- விழுப்புரம், சென்னை- வேலூர் இடையே மிக அதிவேக ரயில்கள் இயக்குவது குறித்தும் கோவை- திருப்பூர்- ஈரோடு சேலம் இடையே மிக அதிவேக ரயில்கள் இயக்குவது பற்றியுமான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.