தமிழ்நாட்டின் 2022 -23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசி வருகிறார்.


பட்ஜெட் உரையின்போது தமிழ் வளர்ச்சித்துறைக்கு கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் முக்கிய அறிவிப்பாக, “சென்னையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடப்பது போல ரூபாய் 5.6 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும். தமிழர்களின் மரபை கொண்டாடக்கூடிய வகையில் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். புதியதாக பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூபாய் 36 கோடி மதிப்பீட்டில் மத்திய நூலகங்கள் அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க : TN Budget 2022 LIVE: பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வித் திட்டம்... சென்னை வெள்ளத்திற்கு ரூ.500 கோடி... பட்ஜெட் அறிவிப்புகள் இதோ