நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தி வருகிறார். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு வரும் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் நாளை மத்திய பட்ஜெட் 2022-23 தாக்கல் செய்யப்பட உள்ளது. 


இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய உரையை தொடங்கினார். இந்தாண்டு வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்படுவது குடியரசுத் தலைவர் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பேசிய குடியரசுத்தலைவர் “இந்தியா இந்தாண்டு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த நேரத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


 


நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன்.  கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்கிறது. இந்திய தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பயன் பெறும் வகையில் அமைந்துள்ளது.


 






கடந்த காலங்களைவிட இந்தியாவில் தற்போது சுகாதார கட்டமைப்பு வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக பலரும் உயிரிழந்துள்ளனர். எனினும் நமது நாட்டின் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் சிறப்பான சேவை ஆற்றி வருகின்றனர். அவர்களுடைய சேவைகளுக்கு என்னுடைய நன்றி.


 


கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு ஆண்டிற்குள் இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்தவதில் இந்தியா ஒரு முன்னோடி நாடாக அமைந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் பலருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பல ஏழைகள் பயன் அடைந்துள்ளனர். 


 






அம்பேத்கரின் கோட்பாடுகளில் ஒன்றான சமத்துவம், சுதந்திரம் மற்றும் ஒற்றுமையான சமூகத்தை என்னுடைய அரசு பின்பற்றி வருகிறது ” எனக் கூறியுள்ளார். 


மேலும் படிக்க: நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு தயார் - பிரதமர் மோடி