வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக தரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 


மத்திய நிதியமைச்சர் சீதாராமன், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கடைசி ஆண்டு 2.0 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.


பட்ஜெட் உரையில் குறிப்பாக நடுத்தர மக்களுக்காக சில திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இதில், நடுத்தர வர்க்கத்தினருக்கென தனி வீட்டுமனை திட்டம் தொடங்கி வைப்பது குறித்தும், நடுத்தர வர்க்கத்தினரை மனதில் வைத்து, வீட்டின் மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைப்பதன்மூலம், நடுத்தர வர்க்கத்தினர் ஆண்டுதோறும் மின்சாரத்திற்காக செலவிடும் பெரும் தொகையை மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.


நடுத்தர மக்களுக்கு என்ன அறிவிப்புகள்?


1. நடுத்தர மக்களுக்கு வீடு:


நடுத்தர வர்க்கத்தினருக்காக அரசு புதிய திட்டத்தை உருவாக்கும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார். வாடகை வீடுகள், குடிசைப்பகுதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் தகுதியுள்ள நடுத்தர மக்கள் தங்கள் சொந்த வீடுகளை வாங்கவோ அல்லது கட்டவோ உதவும் திட்டத்தை எங்கள் அரசு தொடங்கும் என்றார்.


2. வீட்டு மொட்டை மாடியில் சோலார் சிஸ்டம் நிறுவுதல் (மேற்கூரை சோலரைசேஷன்) மற்றும் இலவச மின்சாரம்
மற்றுமொரு பெரிய திட்டத்தின் மூலம் நடுத்தரக் குடும்பங்களுக்கு உதவுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, வீட்டு மொட்டை மாடியில் சோலார் அமைப்பை நிறுவுவதன் மூலம், ஒரு கோடி குடும்பங்கள் மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற முடியும். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை என்ற வரலாற்று சிறப்புமிக்க நாளில் பிரதமரின் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.


இதனால் எதிர்பார்க்கப்படும் பலன்கள் பின்வருமாறு:


இலவச சோலார் மின்சாரம் மற்றும் உபரி மின்சாரத்தை விநியோக நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குடும்பங்களுக்கு பதினைந்தாயிரம் முதல் பதினெட்டாயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம் என்று கூறப்படுகிறது. 


ALSO READ | Budget 2024 Highlights: மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் முதல் 2 கோடி வீடுகள் வரை - பட்ஜெட் 2024ன் முக்கிய அம்சங்கள்!