Honda EV SUVs: ஹோண்டா நிறுவனம் E:NS2 மற்றும் E:NP2 இரண்டு புதிய மின்சார வாகனங்களை சர்வதேச சந்தைகளில் வெளியிட உள்ளது.


ஹோண்டா மின்சார வாகனம்:


ஹோண்டா நிறுவனம் கடந்த ஆண்டு ஷாங்காய் மோட்டார் ஷோ நிகழ்ச்சியில், மூன்று மின்சார SUV கார்களுக்கான கான்செப்ட்களை வெளியிட்டது. இந்நிலையில், ​ஹோண்டாவின் ​E:NS2 மற்றும் E:NP2 ஆகிய இரண்டு மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று, சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர உள்ள இந்த மின்சார எஸ்யுவி கார்களில்,  விளக்குகள் மற்றும் பம்பர்களைத் தவிர மற்ற அனைத்து அம்சங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.


ஹோண்டா E:NS2, E:NP2: வடிவமைப்பு:


சீனா ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில்  விற்பனையில் இருந்து வெளியாக உள்ள,  e:NS1 மற்றும் e:NP1 EVகளைப் போலவே, E:NS2 மற்றும் E:NP2 ஆகியவையும் முறையே டோங்ஃபெங் மற்றும் GAC ஆகிய நிறுவனங்கள் உற்பத்தி செய்ய உள்ளன. இருப்பினும், HR-V-அடிப்படையிலான e:NS1 மற்றும் e:NP1 போன்றவற்றின் சார்ஜிங் போர்ட் மற்றும் கிரில்லின் நிறம் ஒரே மாதிரியாக இருந்தது போலல்லாமல், E:NS2 மற்றும் E:NP2 ஆகியவை அதிக வேறுபாட்டைக் கொண்டுள்ளன. e:NS2 ஸ்போர்ட்ஸ் ஆங்குலர் LED பகல் நேரங்களில் ஒளிரும் லேம்ப்கள் பியூஜியோட் கார்களை நினைவூட்டுகின்றன. அதே சமயம் e:NP2 வெளிநாட்டில் விற்கப்படும் சமீபத்திய சிவிக் போன்ற புதிய ஹோண்டாக்களை ஒத்திருக்கிறது.


இந்த புதிய கார் மாடல்களில் முன் மற்றும் பின்புற பம்பர்களில் பரந்த கிடைமட்ட பார்கள் இருப்பது தான், EV SUVகள் இரண்டிற்கும் பொதுவான ஒற்றுமையாகும். இது அந்த பிட்களை உயர் தொழில்நுட்ப ஏர் கண்டிஷனிங் யூனிட்கள் போல காட்சிப்படுத்துகிறது. சாய்வான பின்புற கூரையானது இரண்டு மாடல்களுக்கும் ஒரு பொதுவான நிமிர்ந்த SUVயைக் காட்டிலும் கிராஸ்ஓவர் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.


ஹோண்டா E:NS2, E:NP2: பேட்டரி, பரிமாணங்கள்:


ஹோண்டாவின் புதிய EV SUVகள் 68.8kWh பேட்டரியில் இருந்து 204hp ஆற்றலை உருவாக்கும் ஒற்றை மோட்டாரைப் பெறுகின்றன. இரண்டு மாடல்களும் ஒரே மாதிரியான வீல்பேஸ், அகலம் மற்றும் உயரம்  ஆகிய அளவீடுகளை முறையே 2,735 மிமீ, 1,840 மிமீ மற்றும் 1,570 மிமீ ஆக உள்ளது.  1 மிமீ நீளத்தில் NP2 பெரிய காராக உள்ளது.


இந்தியாவிற்கான ஹோண்டா EVகள்:


இந்த இரண்டு மாடல்களையும் ஹோண்டா இந்தியாவிற்கு கொண்டு வருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும், ஜப்பானிய பிராண்டின் ACE (ஏசியன் காம்பாக்ட் எலக்ட்ரிக்) திட்டம் , எலிவேட்-அடிப்படையிலான EV ஐ உருவாக்கும் பணிகளில் முழு வீச்சில் உள்ளது. எலிவேட்-அடிப்படையிலான மின்சார வாகனம் இந்தியாவில் 2026 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதனிடையே இந்தியாவில் அடுத்தடுத்து மின்சார வாகனங்கள் களமிறங்குவதால் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இல்லை. 


Car loan Information:

Calculate Car Loan EMI