நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்றுமுறை குறைந்தபட்ச வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், அவர் வெளியிட்ட அறிவிப்பில் புதிய வருமான வரி படிவங்களை அடுத்த 2 மதிப்பீட்ட ஆண்டுக்கான படிவங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறது. புதிய மேம்படுத்தப்பட்ட வருமான வரித்தாக்கல் படிவம் அறிமுகம் செய்யப்படும்.




காடு வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபடக்கூடிய விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு திட்டம் அறிமுகம், குறைந்த மக்கள்தொகை கொண்ட எல்லைப்புற கிராமங்களில் புதிய எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின்கீழ் ஓரளவு இணைப்புகள் ஏற்படுத்தப்படும். நகர்ப்புற மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் 280 கோடி ரூபாய் செலவில் திறன் மையங்கள் உருவாக்கப்படும்.




மின்னணு வரைகலை தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களுக்கு அனிமேஷன், விஷிவல் எபெக்ட்ஸ், டிஜிட்டல் விளையாட்டுகள் மற்றும் கார்ட்டூன் படங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை வளர்க்கவும் திட்டங்களை வடிவமைக்கவும் சிறப்பு பணிக்குழு. நாட்டை நவீனப்படுத்தும் ஆற்றல் கொண்ட பசுமை எரிசக்தி மற்றும் சுலபமான போக்குவரத்து முறைகள் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் இந்திய தொழில்துறையை மாற்றக்கூடியதாகும் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.


மேலும் படிக்க : Budget 2022: ‛தபால் வங்கி கணக்கு இருந்தால்... வங்கி பண பரிமாற்றம் செய்யலாம்...’ -பட்ஜெட்டில் அறிவிப்பு!


மேலும் படிக்க : Budget 2022 Memes: வரிச்சலுகை ஏமாற்றம்... வரிவரியாய் வரிசை கட்டும் மீம்ஸ்கள்!


மேலும் படிக்க : Union Budget 2022: சாமானியர் பயன்படுத்தும் குடைக்கு வரி உயர்வு... பணம் படைத்தவர் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண