பூந்தமல்லியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதேபோல் கோயம்பேடில் இருந்து பட்டாபிராம் வரையிலும் விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலும் மெட்ரோ சேவை நீடிக்கபட உள்ளதாக தெரிவித்துள்ளார். 


போரூர் - பூந்தமல்லி மெட்ரோ பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இந்த சேவை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மெட்ரோ சேவையை விரிவு படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ இரயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடங்களில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.


151 கோவை மாநகரில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களி 1 ங்களில் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மெட்ரோ இரயில் திட்டத்திற்கென தயாரிக்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக, இவ்வாண்டு சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் விதமாக, சென்னை நகரின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி பகுதி வரை 14.2 கிமீ. நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 2,100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (TANSHA) மூலம் அமைக்கப்படும்.


200 தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும். அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவும், பல தொழில் வழித்தடங்களை உருவாக்கிட அரசு முனைந்துள்ளது. இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக ஒரகடம் செய்யார் தொழில் வழித்தடம் உருவாக்கப்படும். இதனால், செய்யார் தொழிற் பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வழிவகை ஏற்படும். இதற்காக, 250 கோடி ரூபாய் மதிப்பில் முதற்கட்டப் பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளது.