Budget 2026 Category Wise: மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், அதிகபட்சமாக பாதுகாப்பு துறைக்கு சுமார் 10 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு பட்ஜெட் 2026:

மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது, கல்வி மற்றும் மருத்துவ தரத்தை உயர்த்துவது போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் புவிசார அரசியலை கருத்தில் கொண்டு மற்ற அனைத்து துறைகளை காட்டிலும், பாதுகாப்பு துறைக்கு அதிகபட்சமாக சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு

  • போக்குவரத்து துறை - ரூ.5,98,520 கோடி
  • பாதுகாப்பு துறை - ரூ.5,94,585 கோடி
  • பாதுகாப்புத்துறையை நவீனமயமாக்க - ரூ.2,19,306 கோடி
  • ஊரக வளர்ச்சித்துறை - ரூ. 2,73,108 கோடி
  • உள்விவகாரத்துறை - ரூ. 2,55,234 கோடி
  • விவசாயம் மற்றும் அது சார்ந்த துறை - ரூ. 1,62,671 கோடி
  • கல்வி - ரூ.1,39,289 கோடி
  • ஆற்றல் - ரூ.1,09,029 கோடி
  • சுகாதாரம் - ரூ. 1,04,599 கோடி
  • நகர்ப்புற வளர்ச்சித்துறை - ரூ.85,522 கோடி
  • தகவல் தொழில்நுட்பத்துறை - ரூ.74,560 கோடி
  • வணிகம் மற்றும் தொழில்துறை - ரூ.70,296 கோடி
  • சமூக நலத்துறை - ரூ.62,362 கோடி
  • அறிவியல் துறை - ரூ.55,756 கோடி
  • வரி நிர்வாகம் - ரூ.45,500 கோடி
  • வெளியுறவுத்துறை - ரூ.22,119 கோடி
  • நிதித்துறை - ரூ.20,649 கோடி
  • வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி - ரூ.6,182 கோடி

இதையும் படியுங்கள்: Budget 2026: மத்திய அரசு பட்ஜெட் - ரூ.197 லட்சம் கோடி கடன், ரூ.17.2 லட்சம் கோடி இலக்கு, 1 ரூபாயில் எதற்கு எவ்வளவு செலவு?

2025-26 பட்ஜெட் Vs 2026-27 2பட்ஜெட்

வ. எண்துறைபட்ஜெட் 2025-26பட்ஜெட் 2026-27
1போக்குவரத்து துறைரூ.2,87,333ரூ.5,98,520 கோடி
2பாதுகாப்பு துறைரூ.6,81,210 கோடிரூ.5,94,585 கோடி
3ஊரக வளர்ச்சித்துறைரூ.1,90,405 கோடிரூ. 2,73,108 கோடி
4உள்விவகாரத்துறைரூ.2,33,210 கோடிரூ. 2,55,234 கோடி
5விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைரூ.1,37,756 கோடிரூ. 1,62,671 கோடி
6கல்விரூ.1,28,650ரூ.1,39,289 கோடி
8சுகாதாரம்ரூ.99,858 கோடிரூ. 1,04,599 கோடி
9நகர்ப்புற வளர்ச்சித்துறைரூ.96,777 கோடிரூ.85,522 கோடி
10தகவல் தொழில்நுட்பத்துறை & டெலிகாம்ரூ.26,026 கோடிரூ.74,560 கோடி
11வணிகம் மற்றும் தொழில்துறைரூ.18,446 கோடிரூ.70,296 கோடி
12சமூக நலத்துறைரூ.14,886 கோடிரூ.62,362 கோடி
13அறிவியல் துறைரூ.38,613 கோடிரூ.55,756 கோடி
15வெளியுறவுத்துறைரூ.20,516 கோடிரூ.22,119 கோடி
16நிதித்துறைரூ.19,39,001 கோடிரூ.20,649 கோடி
17வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிரூ.5,915 கோடிரூ.6,182 கோடி