Budget 2026 Income Tax: திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரிகளை குறைத்த மத்திய அரசு
கடந்த நிதி நிலை அறிக்கையின்போது அறிவிக்கப்பட்ட, புதிய வருமான வரி சட்டமானது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். எளிமைப்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள் மற்றும் விதிகளானது விரைவில் வெளியிடப்படும்.
- திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மார்ச் 31ம் தேதி வரை அவகாசம்
- வருமனம் தொடர்பான தவறான தகவல்களுக்கு 100 சதவிகிதம் அபராதம்
- மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் வழங்கிய அறிவிப்பால் கிடைக்கும் எந்தவொரு தொகைக்கும் விதிக்கப்பட்டு வந்த வரியிலிருந்தும் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மீது எந்தவொரு TDS-ம் வசூலிக்கப்படமாட்டாது.
- வெளிநாட்டு சுற்றுலா தொகுப்பு மீது விதிக்கப்படும் TCS வரி வரம்பானது தற்போது வசூலிக்கப்படும் 5 முதல் 20 சதவிகிதத்திலிருந்து, எந்தவித விதிகளுமின்றி ஒட்டுமொத்தமாக 2 சதவிகிதமாக குறைகப்படுகிறது.
- LRS என பிரபலமாக அறியப்படும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் மீதான TCS 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.
- காலணி ஏற்றுமதியாளர்களுக்கு மூலதன பொருட்களின் இறக்குமதிக்கு வரி இல்லை
- லித்திய பேட்டரிக்கு இறக்குமதி வரி இல்லை
- தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை
- இந்தியாவில் டேட்டா செண்டர்களை கொண்டு க்ளவுட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2047ம் ஆண்டு வரை வரி இல்லை (விதிகளுக்குட்பட்டது)
- தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் மீதான வரியையும் 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்படும்
- மதுபானம், கழிவுகள் மற்றும் கனிமங்கள் மீதான டிசிஎஸ் 2 சதவிகிதமாக குறைக்கப்படும்
- டெண்டு இலைகளுக்கான விகிதம் 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைக்கப்படும்
- 17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு வரி குறைப்பு
