Budget 2025: விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்ட்களுக்கான வரம்பை உயர்த்தி மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்:

நாடாளுமன்றத்தில் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, ”விவசாயம், சிறுகுறு தொழில்கள், முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி ஆகியவை தான், நாட்டின் வளர்ச்சிக்கான சக்தி வாய்ந்த இன்ஜின்கள்.  விவசாயிகளுக்கான குறுகிய கால கடன்களை பெற உதவும், கிஷான் கிரெடிட் கார்ட்களுக்கான கடன் வரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் கிரெடிட் கார்டுகள் (KCC) 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு குறுகிய காலக் கடன்களைத் தொடர்ந்து வழங்கும்

குறுகிய கால கடன் கிடைப்பதற்கும் உதவும் வகையில் 100 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதமர் தன் தன்ய கிரிஷி யோஜனா தொடங்கப்படும்.  முதல் கட்டமாக நூற்றுக்கணக்கான வளரும் விவசாய மாவட்டங்கள் உள்ளடக்கப்படும், துர், உரத் மற்றும் மசூர் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பருப்பு வகைகளில் ஆத்மநிர்பர்தாவிற்கான ஆறு ஆண்டு பணிகள் முன்னெடுக்கப்படும். NAFED மற்றும் NCCF போன்ற மத்திய ஏஜென்சிகள் இந்த பருப்பு வகைகளை ஏஜென்சிகளில் பதிவு செய்து ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய தயாராக இருக்கும் ஊட்டச்சத்து தேவைகள் குறித்து மக்களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் விதமாக, இலக்கு முன்முயற்சிகளுடன் இந்த போக்கை அரசாங்கம் ஆதரிக்கும்   ” என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மீன் வளர்ப்பு

மேலும், ”மீன் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது . கடல்சார் துறையைப் பொறுத்தவரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு தீவுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, மீன்வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பை அரசாங்கம் கொண்டு வரும்.

இதையும் படியுங்கள்: Budget 2025 LIVE: நாடே எதிர்பார்ப்பு! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் - சாமானியனுக்கு சந்தோஷமா?

பீகாருக்கு குவிந்த திட்டங்கள்

தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் பீகாரில் அமைக்கப்படும்.  பீகாரில் சோளம் வாரியம் நிறுவப்படும். இது சோளத்தின் உற்பத்தி, செயலாக்கம், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை மேம்படுத்தும்” என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.