Nirmala Sitharaman Budget Day Saree: மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிக்கலான தங்க வேலைப்பாடுகளுடன் கூடிய நேர்த்தியான வெள்ளைப் புடவையை அணிந்து நாடாளுமன்றம் வந்துள்ளார்.
சேலையில் நிர்மலா சீதாராமன்:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளை, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து எட்டாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும், தனது தனித்துவமான புடவை தேர்வுகளால் நிர்மலா சீதாராமன் கவனம் ஈர்ப்பார்.
அவர் அணிந்து வரும் சிவப்பு, நீலம், மஞ்சள், பழுப்பு மற்றும் வெள்ளை நிற புடவைகள், பல்வேறு இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கதைகளைச் சொல்கின்றன. அந்த நாளில் அறிவிக்கப்பட்ட வரி விலக்குகள், நிதிக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றுடன் அவை பட்ஜெட் தினத்தின் முக்கிய அங்கமாக உள்ளது.
இன்றைய புடவை என்ன?
அந்த வரிசையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டிற்காக, நிதியமைச்சர் சிக்கலான தங்க நிற வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளைச் சேலையை அணிந்து, சிவப்பு ரவிக்கை (BLOUSE) மற்றும் சால்வையுடன் இணைத்து அணிந்துள்ளார். கைத்தறி மீதான அவரது அன்பை, ஆடைத் தேர்வுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வெள்ளை நிறம் வளர்ச்சியை ஊக்குவித்து, தனிநபர் வருமான வரி விலக்கு உயர்வு போன்ற எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, சந்தோஷத்தை வழங்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். பீஹாரின் மதுபானி கலை வேலைப்பாட்டுடன் கூடிய இந்த சேலையை, பத்ம விருதுபெற்ற துலாரி தேவி வடிவமைத்துள்ளார்.
கடந்த காலங்களில் நிதியமைச்சரின் சேலை தேர்வு:
- 2019 இல் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, தங்க பார்டர்களைக் கொண்ட இளஞ்சிவப்பு மங்கல்கிரி பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.
- 2020 பட்ஜெட்டில் பச்சைக் கோடு போடப்பட்ட மஞ்சள் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் . இந்து கலாச்சாரத்தில் புடவை முக்கியத்துவம் வாய்ந்தது, மஞ்சள் நிறம் மங்களகரமானதாக நம்பப்படுகிறது மற்றும் நம்பிக்கை மற்றும் செழிப்பின் சின்னமாக உள்ளது.
- 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது , சீதாராமன் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள போச்சம்பள்ளி பட்டுப் புடவையை அணிந்திருந்தார். இதன் மூலம் உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் இந்திய நெசவு சமூகங்களுக்கு அவர் தனது ஆதரவைக் காட்டினார்.
- 2022ம் ஆண்டு பொம்காய் சேலையை அணிந்தார். இது பிராந்திய கைவினைத்திறன் மற்றும் கலையை மேம்படுத்தியது. பழுப்பு நிற புடவையில் மெரூன் மற்றும் தங்க பார்டர்கள் இருந்தன, மேலும் இது ஒடிசாவின் கைத்தறி மரபுக்கு மரியாதை செலுத்தியது. ஒடிசாவின் போம்காய் கிராமத்தில் பொம்காய் புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.
- 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, கர்நாடகாவின் தார்வாட் பகுதியைச் சேர்ந்த கசுதி எம்பிராய்டரியின் அழகைக் காட்டும் கருப்பு கோயில் வடிவ பார்டர்களைக் கொண்ட துடிப்பான சிவப்பு பட்டுப் புடவையை சீதாராமன் அணிந்திருந்தார்.
- 2024 ஆம் ஆண்டில் , மேற்கு வங்காளத்தில் பிரபலமான கைவினைப் பொருளான காந்தா எம்பிராய்டரியுடன் கூடிய நீல நிற டஸ்ஸார் பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.