Budget 2024: சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் வளர்ச்சிக்காக புதிய கிரெடிட் உத்தரவாத திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் முத்ரா திட்டத்தில் கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்றத்தின் 2024-2025ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை, வேலைவாய்ப்பு, கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உற்பத்தி மற்றும் சேவைகள் துறை, நகர்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுட்டுள்ளன. 


நரேந்திர மோடியின் 3.0 அரசு, பின்பற்ற வேண்டிய 9 முன்னுரிமைகளை வகுத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அவரது உரையில் குறிப்பிட்டார்.



  • விவசாயத்தில் உற்பத்தித் திறன் பெருக்கம்

  • வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு

  • மனித வள மேம்பாடு

  • சமூக நீதி

  • உற்பத்தி மற்றும் சேவைகள்

  • நகர்ப்புற மேம்பாடு

  • எரிசக்தி பாதுகாப்பு

  • உள்கட்டமைப்பு

  • கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்


 அனைவருக்கும் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதைக் கருத்தில் கொண்டு இந்த 9 முன்னுரிமைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த 9 அம்சங்களிலும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை பட்ஜெட் உறுதிசெய்யும். அதோடு, எதிர்கால பட்ஜெட்டுகள், இந்த முன்னுரிமைகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 


சிறு,குறு, நடுத்தர தொழில்துறை:


சிறு, குறு, நடுத்தர தொழில்துறை வளர்ச்சிக்காக ( Micro, Small, and Medium Enterprises (MSMEs)) புதிய கடன் உத்தரவாத திட்டம் (Credit Guarantee Scheme) அறிவிக்கப்படுள்ளது. கிரெட் உத்தரதா திட்டத்தின் மூலம் தொழில் தொடங்குபவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள். செல்ஃப் ஃபினான்ஸின் பிரிவில் ஒருவர் ரூ.100 கோடி வரை கவரேஜ் உத்தரவாத நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடன் தொகை அதிகமாக இருந்தாலும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கல், அபாயங்களை குறைத்து தொழில் வளர்ச்சியை அதிகரிக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த துறைக்கு கடந்த 2023-24 ஆண்டைவிட 41.6 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு உயர்ந்துள்ளது. 


முத்ரா கடன் திட்டம்:


முத்ரா திட்டத்தில் (Mudra loans) கடன் பெறும் உச்சவரம்பு பத்து லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சமாக அதிகரித்துள்ளது. முன்பு ரூ.10 லட்சம் வரம்பாக இருந்தபோது கடன் பெற்று, அதை உரிய முறையில் திருப்பிச் செலுத்தியவர்கள் புதிய வரம்பின் கீழ் பயன் பெறலாம்.