New Income Tax Rate:  20224 - 25 ஆம் நிதி ஆண்டிற்கு 6 அடுக்குகள் கொண்ட புதிய வருமான வரி முறைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 


பட்ஜெட் தாக்கல்:


முழு பட்ஜெட்டானது, பொதுவாக பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த வருடத்தில், மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, புதிய அரசு அமையும் வரையிலான கால வரையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 


இதையடுத்து,  தேர்தல் முடிவடைந்த நிலையில்,  பாஜக தலைமையிலான பாஜக கூட்டணி பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது பிரதமர் மோடி தலைமையில், 3வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாகும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7வது முழு பட்ஜெட்டார்கும்.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது , பலரும் எதிர்பார்த்த வருமான வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 


3 லட்சம் வரை வரி விலக்கு:


வருமான வரியில் Old Tax Regimeல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. New tax Regime-ல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய வருமான வரி அடுக்குகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 


1.ரூ. 3 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை


2.ரூ. 3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5 % வரி விதிப்பு 


3. ரூ. 7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 % வரி விதிப்பு 


4.ரூ. 10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 % வரி விதிப்பு


5. ரூ. 12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 % வரி விதிப்பு  


6.15 லட்சத்திற்கு மேல்  30% வரி விதுப்பு 


மேலும், தற்போது வருமானத்தில் நிலையான கழிவுத்தொகை ரூ. 50, 000லிருந்து ரூ. 75, 000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 




IMAGE SOURCE: GOVERMENT OF INDIA 


இதற்கு முன்பு இருந்த வருமான வரி முறை: 


 



பழைய வருமான வரி படிநிலைகளில் ரூ.3 லட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், ரூ.7 லட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இத்துடன் நிலையான கழிப்புத்தொகையாக ரூ. 50, 000 அளிக்கப்பட்டிருந்தது. இதனால், ரூ. 7. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டிய நிலை இல்லாமல் இருந்தது. 


”வரி முறையை எளிமையாக்க முயற்சி”


மேலும், தற்போது இதற்கு முன் அறக்கட்டளைகளுக்கு விதிக்கப்பட்ட 2 வரி முறையை ஒன்றாக ஒரே வரியாக இணைக்கப்பட்டுள்ளது. 


வருமான வரி செலுத்துவோரில் , 3ல் 2பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர் என்றும் தொடர்ந்து நேரடி வரி விதிப்பு முறையை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றும்  நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 


Also Read: Budget 2024: 9 அம்சங்களை உள்ளடக்கிய பட்ஜெட் : என்ன தெரியுமா?


Also Read: Budget 2024: ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடி; பீகாருக்கு 26,000 கோடி: சிறப்பு நிதியால் சிறப்பாக கவனித்த மத்திய பட்ஜெட்!