மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். தங்கம், வெள்ளி விலை ஆகிய பொருட்களுக்கான வரியை அதிகரித்துள்ள மத்திய அரசு தொலைக்காட்சி, செல்போன், டிவி ஆகியவற்றிற்கான உதிரிபாகங்களுக்கான சுங்க வரியை குறைத்துள்ளது.
குறையும் செல்போன், தொலைக்காட்சி விலை:
இந்தியாவில் செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. செல்போன் கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவிப்பால் இந்தியாவில் தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றின் விலை இனி வரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
அதேசமயம், மத்திய அமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தங்கம்,வெள்ளி, வைரம் ஆகிய ஆபரணங்களுக்கான வரியை உயர்த்தியுள்ளதால் ஏற்கனவே உச்சத்தில் உள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை அதிகரிக்க உள்ளது. இது மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறக்குமதி வரி:
தற்போது தொலைக்காட்சி குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரமாக உள்ளது. அதிகபட்சமாக லட்சக்கணக்கில் வரை விற்பனையாகிறது, செல்போன்களின் விலையும் சில ஆயிரங்களில் தொடங்கி லட்சக்கணக்கில் விற்பனையாகி வருகிறது. இன்றைய காலத்தில் வீடுகளில் செல்போன்களும், தொலைக்காட்சியும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
இந்தியாவில் தொலைக்காட்சிகளின் விற்பனையை காட்டிலும் செல்போன்களின் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால், அதற்கான உதிரிபாகங்களின் இறக்குமதி வரி குறைந்துள்ளதால் இனி வரும் நாட்களில் தொலைக்காட்சி, செல்போன்களின் விலை குறையும்.
அதிகரிக்கும் தங்கம் விலை:
அதேசமயம், சாமானியர்களின் பாதுகாப்பாக கருதப்படும் தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கான இறக்குமதி வரியை அதிகரித்திருப்பதால் இனி வரும் நாட்களை மிகவும் மோசமாக பாதிக்கும். ஏற்கனவே தமிழ்நாட்டில் சவரன் தங்கம் ரூபாய் 42 ஆயிரத்திற்கு விற்பனையாகி வரும் நிலையில், தற்போது இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளதால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. உடலுக்கு தீங்கான பழக்கம் என்றாலும் சிகரெட் விற்பனை இந்தியாவில் சக்கை போடு போட்டுத்தான் வருகிறது. இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டிற்கு பிறகு சிகரெட் விலை உயர உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு வெள்ளி, தங்கம், இறக்குமதி செய்யப்பட்ட சமையலறை சிம்னி, சிகரெட்டுகள், வைரங்கள், பிளாட்டினங்களின் விலை ஏற்றம் காண உள்ளது.
மத்திய பட்ஜெட்டினால் பொம்மை, இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள், ஆட்டோமொபைல் (வாகனங்கள்) செல்போன்கள், தொலைக்காட்சி, பேட்டரிகள், கேமரா லென்ஸ்கள் விலை குறைய உள்ளது.
மேலும் படிக்க: Budget 2023 Highlights: மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன..? ஓர் விரிவான அலசல்..!
மேலும் படிக்க: Budget 2023: பெண்களே உங்களுக்காக! அதிரடி சேமிப்பு திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன்.. என்ன திட்டம்? முழு விவரம்..
பட்ஜெட் குறித்த லைவ் அப்டேட்ஸ்க்கு... இங்கே கிளிக் செய்யவும்...