Budget 2023 LIVE: தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத நிதிநிலை அறிக்கை - தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் - முதல்வர் ஸ்டாலின்
Union Budget 2023 LIVE Updates: 2023-24 நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் (Budget 2023 LIVE Updates) தொடர்பான தகவல்களை உடனுக்குடன் இங்கு அறியலாம்.. Abpnadu-உடன் இணைந்திருங்கள்..
Budget 2023 LIVE: தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத ஒன்றிய நிதிநிலை அறிக்கை - தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் - முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். தொடர்ந்து, வேட்பாளர் செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சென்னையில் பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.
அனைத்து பிரிவு மக்களையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது மத்திய பட்ஜெட் 2023 - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட்டில் ஏழை மக்கள் நலனுக்காக ஒன்றுமில்ல.. வேலைவாய்ப்புக்கு திட்டமில்லை - காங்கிரஸ்
மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டால், புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி உரை
பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரின் முன்னேற்றத்துக்கான பட்ஜெட், இந்த 2023 பட்ஜெட் - பிரதமர் மோடி
Budget 2023 : அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் பட்ஜெட் இது - பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேச்சு
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து ஆபரணத் தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.
ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு ரூ. 4.5 லட்சத்தில் இருந்து 9 லட்சமாக உயர்வு - நிதியமைச்சர் அறிவிப்பு
Budget 2023 5G Services: 5ஜி சேவைக்காக 100 ஆய்வகங்கள் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பெண்களுக்கான சிறுசேமிப்பு திட்டம் : ரூ.2 லட்சத்தை, 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 7.5% வட்டி விகிதத்தில் தொகை பெறலாம்.
தங்கம், வெள்ளி வைரத்துக்கான சுங்க வரி உயர்த்தப்படுகிறது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
அடுத்த 3 ஆண்டுகள், 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி - பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு
யார், யார் எவ்வளவு வரி செலுத்தவேண்டும்?
ரூ.0 - ரூ - 3 லட்சம் - வரி இல்லை
ரூ. 3 லட்சம் - ரூ. 6 லட்சம் - 5%
ரூ.6 லட்சம் - ரூ.9 லட்சம் - 10%
ரூ.9 லட்சம் - ரூ.12 லட்சம் - 15%
ரூ. 12 லட்சம் - ரூ.15 லட்சம் - 20%
ரூ.15 லட்சத்துக்கும் மேல் - 30%
வருமான வரி விலக்கு உச்சவரம்பு : ஏற்கெனவே ரூ.5 லட்சம் வரை இருந்த வரம்பு, தற்போது ரூ.7 லட்சமாக உயர்வு
புதிய வருமான வரி:
7லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை
3லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு எந்த வரியும் இல்லை
7-9லட்சம் வரை இருப்பவர்களுக்கு 5% வரி
15லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் 30% வரி
Income Tax : தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
நாட்டில் நடப்பு நிதியாண்டில், 6.50 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டிவி பேனல், செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி, 21% இருந்து 13%-ஆக குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Savings Scheme For Women : பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம் : 7.5% வட்டி விகிதத்தில் பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம் - நிதியமைச்சர்
அனைத்து அரசு சேவைகளிலும், அடையாள ஆவணமாக பான் கார்டு பயன்படுத்தப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Budget Pan Card - பான் கார்டை அடையாள ஆவணமாக்க மத்திய அரசு திட்டம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
10,000 பயோ ரிசோர்ஸ் மையங்கள் அமைக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
KYC நடைமுறைகள் எளிமையாக்கப்படும் : டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் KYC நடைமுறைகள் எளிமையாக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Budget 2023 - Airports : நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பிரதமரின், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79000 கோடி நிதி - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அடுத்த 3 ஆண்டுகளில் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ICMR நிறுவனங்கள் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
- விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேளாண் நிதி ஒதுக்கீடு.
- கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்துக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.
- நாட்டின் முதுகெலுமபான விவசாயட்த்துறையை ஊக்குவிக்க வேளாண்துறை மூலம் 20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
விவசாயத்துக்கு கடன் வழங்க 20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சியில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய அரசு சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை அளித்துள்ளது - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தனிநபர் வருமானம் இரண்டு மடங்கு உயர்வு - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
உணவு தானிய விநியோகத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்
”7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு ஊக்கம் ஆகியவற்றுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது” - நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து இன்று காலை முதல் இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
”இந்தியாவின் அடுத்த 100 ஆண்டு காலத்துக்கான ப்ளூப்ரிண்ட்டாக இந்த பட்ஜெட் இருக்கும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன” - நிர்மலா சீதாராமன்
இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூபிரிண்டாக இருக்கும் - நிர்மலா சீதாராமன்.
”இந்தியப் பொருளாதாரம் ஒளிரும் நட்சத்திரம், உலக அளவில் இந்தியாவில் தால் அதிக பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது” - நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். “நாட்டின் 75ஆவது அமிர்த பெருவிழாவின் பட்ஜெட் தாக்கலானது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இது இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். “நாட்டின் 75ஆவது அமிர்த பெருவிழாவின் பட்ஜெட் தாக்கலானது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இது இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2023 - 24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலானது.
உறுப்பினர்களுக்கு தருவதற்காக மத்திய பட்ஜெட் நகல் மக்களவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக பட்ஜெட் ஆவண நகல்கள் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டன. விமானப்படை லாரியில் கொண்டு வரப்பட்ட பட்ஜெட் நகல்களை மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையிட்டனர்.
இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்ததும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்ந்து 60,000 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 17,770 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட்டை நாடாளுமன்ற வளாகத்தில் நின்று மக்களுக்காக காட்டினார்.
இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகத்துக்கு வருகை தந்துள்ளார்.
மத்திய அமைச்சர் பக்வத் கிருஷ்ணராவ் காரத் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.
நாட்டின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்பாக வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக மாற்றமில்லாத வருமான வரி உச்சவரம்பு அடுத்தாண்டிலாவது மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏறுமுகத்துடனே தொடங்கும் என்று வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
Background
Budget 2023 LIVE Updates:
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை:
மத்திய அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே நான்கு முறை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து ஐந்தாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் தற்போதைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட உள்ள இறுதி பட்ஜெட் இது என்பதால், நடுத்தர மக்களைக் கவரும் விதமான பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை?
ரூ.2.5 லட்சம் வருமான வரி விலக்கு உச்சவரம்பு கடந்த 2014ஆம் ஆண்டு பட்ஜெட்டின்போது நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அதில் மாற்றம் செய்யப்படாத நிலையில், உச்ச வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாத சம்பளதாரர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 2023-24 பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் வேளாண்துறை தொடர்பான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான ஊக்கத்தொகை, PM கிசான் ஊக்கத்தொகை உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு:
- மலிவு விலை வீடுகளுக்கான வரம்பு 45 லட்சம் ரூபாயில் இருந்து உயர்த்தப்பட வேண்டும்
- உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு
- 5 லட்சம் ரூபாய் வரையிலான அடிப்படை வரிச்சலுகை
- வருமான வரி விதிப்புக் குறைப்பு
- வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காங்கிரஸ் கோரிக்கை:
”பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கி, மக்கள் கைகளில் அதிகப் பணத்தை வீட்டுக்குக் கொண்டு செல்வதற்கான வழிகளை அரசு கண்டறிய வேண்டும் எனவும்” கங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கை:
இந்திய தலைமை பொருளாதார ஆலோசகரின் தலைமையின் கீழ் தயாரிக்கப்பட்ட, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
- அதன்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் ( 2022-23 ) 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு .
- அடுத்த நிதியாண்டில் ( 2023-24 )பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவீதமாக இருக்கலாம் என கணிப்பு
நடப்பு நிதியாண்டில் வேளாண் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகை 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
சிறு, குறு தொழில்துறையினருக்கான கடன் வழங்கல் 30.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் வரும் அந்நிய முதலீடு 4 மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக மருந்து உற்பத்தி தொழில் மட்டுமே 2000 கோடி டாலர் அதாவது, ரூ.1,63,440 கோடியை அந்நிய முதலீடாக பெற்றுள்ளதாக தெரிகிறது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பதாகவும், இதில் 47 சதவீத மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு இருப்பதாகவும் பொருளாதார அறிக்கையில் 2022-23 தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -