Nirmala Sitharaman Budget Saree: 2023 - 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கருப்பு மற்றும் சிவப்பு நிற புடவையில் வருகை புரிந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. கருப்பு மற்றும் சிவப்பு நிறம் என்பது திமுகவின் கட்சிக் கொடியின் நிறம் என்பதால், மத்திய அமைச்சரின் புடவை நிறம் குறித்து திமுகவினர் அதிகமாக தங்களது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக்கி வருகின்றனர். இதற்கு முன்னர் இவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளின் போதும் கைத்தறியில் நெய்யப்பட்ட புடவையில் தான் வருகை புரிந்துள்ளார். அதேபோல் இம்முறையும் அவர் கைத்தறியில் நெய்யப்பட்ட புடவையைல் தான் வருகை புரிந்துள்ளார். இதற்கு முன்னும் தற்போதும் அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது எல்லாம் சிவப்பு நிறம் மற்றும் அது சார்ந்த நிறத்தில் தான் அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவின் 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் நிதியமைச்சகத்திற்கு வந்தார்.


 


பட்ஜெட் தாக்கல்


பின்னர், காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டை ஊடகங்கள் வாயிலாக நிதியமைச்சகத்தின் வாயிலில் நின்று மக்களுக்கு காண்பித்தார். இதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று சந்தித்தார்.




இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டு முதல் நாட்டிற்கு குடியரசுத் தலைவராக 2 பெண்கள் மட்டுமே பதவி வகித்துள்ளனர். முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் பதவி வகித்தார். அவருக்கு பிறகு 2வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவி வகித்து வருகிறார். நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு குடியரசுத் தலைவரை நிதியமைச்சர் சந்திப்பது வழக்கமான நடைமுறையாகும்.


இருவரும் பெண்கள்:


சுதந்திரம் பெற்ற பிறகு நிதியமைச்சரும் – குடியரசுத் தலைவரும் பெண்ணாக இருப்பது இந்திய வரலாற்றிலே இதுவே முதன் முறை ஆகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்விற்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். நாட்டின் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது நாட்டின் நிதியமைச்சர்களாக அந்த காலகட்டத்தில் ப.சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் பொறுப்பு வகித்தனர்.




இதனால், அந்த காலகட்டத்தில் பிரதீபா பாட்டிலுடன் பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் மட்டுமே நிதியமைச்சர்களாக தங்கள் சந்திப்பை நடத்தினர். நாட்டின் 2வது பெண் குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு கடந்தாண்டுதான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இதுவாகும்.


மேலும், மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் இந்த ஆட்சியில் தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Budget 2023 : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எவ்வளவு? - ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர்!