நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் 2022 குறித்து வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்திருக்கும் நிலையில், சாமானியர் மக்கள் எதிர்ப்பார்த்தது என்ன? பட்ஜெட் அறிவிப்பில் விடுபட்டது என்ன? என்பது பற்றிய சின்ன அலசல்.


மேலும் படிக்க: Union Budget 2022: சாமானியர் பயன்படுத்தும் குடைக்கு வரி உயர்வு... பணம் படைத்தவர் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பு!


எதிர்ப்பார்க்கப்பட்டது:



  • ஜவுளித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் மானியம், ஜிஎஸ்டியில் வரிச்சலுகை அறிவிக்கப்படலாம்

  • தொழில், வேலைவாய்ப்பு, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும்.

  • மின்னணு பொருட்கள், மொபைல் போன் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைக்கலாம்

  • டிவி, வாஷிங்மெஷின், ஏசி, செல்போன்களின் விலை குறைய வாய்ப்பு

  • இந்த பட்ஜெட்டில் வரி வரம்பு உயரும் வகையில் புதிய அறிவிப்பு 

  • சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு ஏற்ப ஜிஎஸ்டி வரியில் மாற்றம் இருக்கலாம்

  • மின்சார வாகனங்கள் தொடர்பான புதிய சலுகைகள் அறிவிக்கப்படவும் வாய்ப்பு 

  • புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அறிவிப்புகள் இருக்கலாம்

  • விவசாயம் மற்றும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளும் நிச்சயம் இடம்பெறலாம்



அறிவிக்கப்பட்டதில் விடுபட்டவை:



  • கொரோனா பரவல் மூன்றாம் அலை தாக்கம் இருக்கும் சூழலில், சுகாதரா துறைக்கென பிரத்யேக அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்த்தை அளித்துள்ளது

  • இது போன்ற பெருந்தொற்று காலத்தை சமாளிக்க, வலுவான சுகாதார கட்டமைப்பு இருப்பது அவசியம். இது குறித்து பட்ஜெட்டில் பேசப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக சுகாதரத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

  • கல்வி சார்ந்த அறிவிப்புகளும் கவனிக்கத்தக்க வகையில் இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  • சாமானியர் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு விலை குறைவு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால், உறுதியாக விலை குறைய வாய்ப்பிருக்கிறதா என்பதில் தெளிவில்லை.

  • சாமானியர்கள் அத்தியாவசத்திற்கு பயன்படுத்தும் குடைகளுக்கான இறக்குமதி 20 % வரியாக உயர்த்தப்படும், ஆடம்பர பொருட்களாக பயன்படுத்தும் பட்டை தீட்டப்பட்ட வைர நகைகளுக்கான சுங்கவரி 5 % வரியாக குறைக்கப்பட்டுள்ளது அன்றாட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: Tax Slab, Budget 2022: ‛மாற்றமில்லை... ஏமாற்றமே... உப்புச்சப்பில்லாத வருமான வரி உச்சவரம்பு அறிவிப்பு!’


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண