நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 


இந்நிலையில் மக்களவையில் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அதில், பிட்காயின் போன்ற மெய்நிகர் டிஜிட்டல் சொத்தை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என்றும், அத்தகைய வருவாயைக் கணக்கிடும் போது, ​​கையகப்படுத்துதலுக்கான செலவைத் தவிர, எந்தவொரு செலவு அல்லது பிற சலுகைகளுக்கு விலக்குகள் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். 


 






முன்னதாக, கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் நாணயத்தை அரசே வெளியிடுவது தொடர்பாக நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், 2022-23ஆம் நிதியாண்டில் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


அதில், 'ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் ரூபாய் ( சிபிடிசி எனப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்- central bank digital currency) வெளியிடப்படும். மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தின் அறிமுகம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும். 2022-23 முதல் இந்தப் பணம் வெளியிடப்படும் என்றார். 


டிஜிட்டல் நாணயத்தில் முதலீடு செய்வது எப்படி?


டிஜிட்டல் நாணயம் ஆர்பிஐயால் உருவாக்கப்படும் என்று முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் முதலீடு செய்வது குறித்த வழிமுறைகளை, இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் நாணயத்தை அரசே வெளியிடுவது தொடர்பாக நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண