தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்குட்பட்ட துக்காச்சி, திருமலைராஜபுரம், வண்ணக்குடி ஆகிய போக்குவரத்து தொடர்பில்லாத கிராமப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு பேரிடர் காலத்தில் கற்றல் விளைவு குறித்து பயிற்சி வகுப்புகள்

  நடைபெறுகிறது. கொரானா  தொற்று மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு  ஒரு வகுப்பில் 20 நபர்கள் மட்டுமே அமர வேண்டும் என மாநில கல்வியில் துறை திட்ட இயக்குனராக கருத்துரை தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை மதிக்காது ஒரு சிறிய அறையில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை வைத்து போதிய இடைவெளி இல்லாமல் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து ஆசிரியர்கள் பயிற்சிக்கு வருவதால், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பயிற்சியில் ஈடுபடும் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு, சமூக இடைவெளி எனக் கட்டுப்பாடுகளோடு மக்களின் உயிர்காக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது,   இத்தகைய சூழலில் பேருந்துகளில் பள்ளிகளுக்கு  வந்து செல்வதே ஆசிரியர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.




இந்த நிலையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி என்னும் பெயரில் திருவிடைமருதூர் ஒன்றியத்திலும் போக்குவரத்து தொடர்பில்லாத கிராமங்களில் உள்ள பள்ளிகளில் மொத்த ஆசிரியர்களின்  எண்ணிக்கையை ஒரே இடத்தில் கூட செய்து பயிற்சி அளிக்கிறோம் என்னும் பெயரில் ஆசிரியர்களின் உயிரோடு விளையாடுவது போன்ற ஒரு நடவடிக்கையை கல்வித்துறை எடுப்பது கொரோனா என்னும் பெருந்தொற்றுக்கு வழிவகை செய்ய வாய்ப்பாக இருக்கும்.


இத்தனை அவசரமாக  இப்பயிற்சியை வழங்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லை. மாணவர்களுக்கு இன்னும் அடிப்படைக் கல்வியே முறையாக கற்பிக்கும் சூழல் இன்னும் முழுமை அடையாமல் இருக்கும் இச்சூழலில், கற்றல் விளைவுகள் குறித்த பயிற்சிக்கு இத்தனை அவசரம் ஏன் காட்ட வேண்டும், என்பது பெருத்த கேள்வியை எழுப்புகின்றது.ஒவ்வொரு குறுவள மையத்திற்கும் ஒரு பயிற்சியாளரைத் தேர்வு செய்து, பயிற்சிக்கான கருத்தாளர்களின்  எண்ணிக்கையை அதிகப்படுத்தி, ஆசிரியர்களுக்கு அவர்களது குறுவள மையத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் பயிற்சியை வழங்க வேண்டும்.




மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சியினைக் கையேடு வடிவில் தயாரித்து வழங்கும்  நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளலாம். அதனை விடுத்து, கருத்தாளர்கள் குறைவாக இருக்கின்றார்கள் என்பதற்காக, ஒரு ஒன்றியத்தில் பணியாற்றும் அத்தனை ஆசிரியர்களையும் ஒரே இடத்தில்  கூடச் செய்வதும்,  10 நாட்களுக்கு தினந்தோறும்   பேரூந்துகள் தொடர்பில்லாத கிராமப் பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் பங்கேற்க செய்வதும், ஆசிரியர்களின் உயிரோடு விளையாடும் செயலன்றி வேறில்லை. இது சம்பந்தமாக மாநில கல்வியாளர்கள் சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட கல்வி பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவித்தோம் தொடர்ந்து இதுபோன்று ஒரே வகுப்பில் அதிக ஆசிரியர்களை வைத்து பயிற்சி என்பது கொராண தொற்று வேகமாக பரவி வரும் காலத்தில் அரசு நோக்கத்தில் பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகவே இதில் உடனடியாகப் பள்ளிக்கல்வி அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, பயிற்சியினை ஒத்திவைத்து, தக்க ஏற்பாடுகள் செய்து, பின்பு பயிற்சிக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்  தெரிவிக்கின்றனர்.