இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,190.34 அல்லது 1.48% புள்ளிகள் சரிந்து 79,043.74 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 360.75 அல்லது 1.49% புள்ளிகள் சரிந்து 23,914.15 ஆகவும் வர்த்தகமாகியது. 


பங்குச்சந்தையில் ஆட்டோ, ஐ.டி உள்ளிட்ட துறைகளின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் 1.5 சதவீதம் அளவு சரிவடைந்தது. 


மதியம் 2.50-ன் அடிப்படையில், BSE சென்செக்ஸ் 1,161 அல்லது 1.5 % புள்ளிகள் சரிந்து 79,072 ஆகவும்  NSE நிஃப்டி  351 புள்ளிகள் குறைந்து  23,924 ஆகவும் வர்த்தகமானது. நிஃப்டி 24,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. 1,869 பங்குகள் ஏற்றத்துடனும் 1,547 பங்குகள் சரிவுடனும் 88 பங்குகள் மாற்றமின்றியும் இருந்தது.


நிஃப்டி- 50 பங்குகளில் இன்ஃபோசிஸ், எம்&எம், டெக் மஹிந்திரா, டி.சி.எஸ். ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிந்தது.  அதானி எண்டர்பிரைசஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப் நிறுவனங்கள், எஸ்.பி.ஐ. லைஃப், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் இருந்தன. அதானி நிறுவன பங்குகள் விலை கடந்த செவ்வாய்கிழமை கடுமையான வீழ்ச்சியை சந்தித்த நிலையில், இப்போது இரண்டாவது நாளாக இன்று (28.11.2024) ஏற்றம் கண்டு வருகின்றன.


காரணம் என்ன?


ஐ.டி., ஆட்டோ துறையில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தது. இன்ஃபோசிஸ் பங்குகள் 3.5%மும் டெக் மஹிந்திரா பங்குகள் 1.9% மும் விலை சரிந்தது. ஹெச்.சி.எல். டெக் நிறுவனத்தின் பங்கு விலை 2.7 சதவீதம் சரிந்திருந்தது. அமெரிக்க பணவீக்கம் தொடர்பான தரவுகள் வெளியானதால் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளில் நிலவும் சூழல் ஆகியவை காரணமாக இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.