நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் மதிய உணவு இடைவெளியின் போது ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதித்த அற்புதமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.


மைதானத்தில் ரசிகர்கள்: 


கடந்த காலங்களில் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி வெற்றி பெற்றால் ரசிகர்கள் மைதானத்தில் ஓடி வந்து வாழ்த்துவது, மதிய உணவு இடைவெளி வந்தால் மைதானத்தில் இறங்கி நடப்பது என்பது சர்வசாதரண ஒன்றாக பார்க்கப்பட்டது. இதனால் வீரர்களுக்கும் அப்போது பெரிய அளவில் பாதுக்காப்பபு பிரச்சனைகள் இல்லாமல் இருந்தது.


அதன் பிறகு காலப்போக்கில் மைதானத்தில் ரசிகர்களை உள்ளே நுழைய தடை செய்யப்பட்டது. ரசிகர்களை உள்ளே விட்டால் ஆடுகளம் சேதமாகி விடும் என்பதால் மைதானத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டது. குறிப்பாக இந்திய போன்ற நாடுகளில் கிரிக்கெட் வீரர்களை கடவுள் போல வழிப்படும் நிலையில் இந்த மாதிரியான பாதுக்காப்பு வழிமுறைகள் தேவை என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். 


இதையும் படிங்க: Shubman Gill Injury: கே.எல் ராகுலுக்கு அடித்த ஜாக்பாட்.. 2-வது டெஸ்ட்டிலும் கில் சந்தேகம்!


நியூசி vs இங்கிலாந்து டெஸ்ட்: 


இன்று நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியின் உணவு இடைவெளியின் போது பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வீரர்கள் உணவு உண்பதற்காக உள்ளே சென்றபோது, மைதான ஊழியர்களால் மைதானம் ரசிகர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் ரசிகர்களை மைதானத்தில் அனுமதித்தது, பார்ப்பதற்கு நன்றாக இருந்தது என்று இங்கிலாந்து கிரிக்கெட் தனது சமூக ஊடக பக்கத்தில் இந்த  வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில் ரசிகர்கள் மைதானத்தில் படங்களைக் கிளிக் செய்வதும். சிலர் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.


இருப்பினும், ரசிகர்கள் போட்டி நடக்கும் ஆடுகளத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை, அந்த் பகுதியை சுற்றி பாதுக்காப்பு வீரர்கள் நின்று  பாதுகாத்தனர். மக்களும் அவர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தனர்.  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோ கீழே காண்போம். 






நியூசிலாந்து ரன் குவிப்பு: 


இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 319 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 93 ரன்கள் எடுத்து 7 ரன்களில் தனது சதத்தை தவறவிட்டார்.