புனிதவெள்ளி,  வார இறுதி நாட்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக வங்கிகள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை. 


மூன்று நாட்கள் வங்கிகள் விடுமுறை


புனிதவெள்ளி, இரண்டாவது சனிக்கிழமை, வார இறுதிநாள் உள்ளிட்ட காரணங்களுக்காக நாளை (07.04.2033), நாளை மறுநாள் (சனிக்கிழமை -08.04.2023), ஞாயிறு (09.04.2023) ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


வருமானத்தில் கொஞ்சம் தொகை எப்படியாவது சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவரே கிடையாது எனலாம்.  காசு கையில் இருந்தால் எப்படியும் செலவாகிவிடும் என்று வங்கிகளில் சேமித்து வைக்க தொடங்கினோம். பிறகு, காலப்போக்கில்  பணப்பரிவர்த்தனைகள் வங்கி மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கட்டாய நிலை வந்த பிறகு, அத்தியாவசிய பணப்பரிமாற்றத்தில் வங்கிகளின் பங்கு முக்கியத்தும் வாய்ந்ததாக மாறியது.


வாரத்தில் திங்கள் கிழமை என்றால் வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏனெனில், பென்சன் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் வங்களின் மூலமே நடைபெறுகின்றன. ’டிஜிட்டல் இந்தியா‘, ஆன்லைன் வங்கி முறை செயலில் இருந்தாலும், பலரும் அவற்றை பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல் இருக்கிறது. அவர்கள் வங்கிகளைப் பயன்படுத்துகிறார்கள். வங்கி நிதி உதவியை நாடி இருப்பவர்கள் பலர். இதனால் வங்கியின் வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை தெரிந்து வைத்துகொள்வது நல்லது இல்லையா? ஏப்ரல் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.


ஏப்ரல் மாத விடுமுறை நாட்கள்


வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், இணைய வழி வங்கி செயலியின் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கி விடுமுறை என்பது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட விடுமுறைப் பட்டியலைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, வங்கி விடுமுறை நாட்களைப் பற்றிய சமீபத்திய அறிவிப்புகளுக்கு ரிசர்வ் வங்கியின் இணையதளத்தைப் பார்ப்பது அவசியம் என கூறப்படுகிறது.


ஏப்ரல் மாதத்தில் வரும் விடுமுறை நாட்கள்: 2023


ஏப்ரல் 7: புனித வெள்ளி


ஏப்ரல் 8: இரண்டாம் சனிக்கிழமை


 ஏப்ரல் 14: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/போஹாக் பிஹு/சீராபா/வைசாகி/பைசாகி/தமிழ் புத்தாண்டு தினம் / மஹா பிசுபா சங்கராந்தி/ பிஜு விழா / புய்சு விழா 


ஏப்ரல் 15: விஷு/ போஹாக் பிஹு/ ஹிமாச்சல் தினம் / வங்காள புத்தாண்டு தினம்


ஏப்ரல் 18: ஷப்-ல்-கதர் 


ஏப்ரல் 21: கரியா பூஜை / ஜுமாத்-உல்-விடா 


ஏப்ரல் 22: ரம்ஜான் பண்டிகை/ இரண்டாம் சனிக்கிழமை




மேலும் வாசிக்க..


TN 10th Exam: 10-ஆம் வகுப்பு தமிழ் பாடத் தேர்வு எப்படி இருந்தது?- மாணவர்கள் கருத்து இதுதான்..


Shocking : திருவள்ளூர்: இரண்டு நாட்கள் தொடர்ந்து ஃப்ரீ ஃபயர் கேம்… மயங்கி விழுந்து உயிரிழந்த தொழிலாளி..