Bank Holidays October 2023: அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


வங்கிகள் விடுமுறை:


வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் மட்டும் 16 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிரது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் விடுமுறை:


அக்டேபர் மாதத்தின் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும் காந்தி ஜெயந்தி, துர்கா பூஜை, தசரா, விஜயதசமி, சரஸ்வதி பூஜை, சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள், நரக சதுர்தசி, மஹா அஷ்டமி, மகா நவமி, சம்வத்சாரி ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.


ஆனால், இந்த விடுமுறையானது அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். உதாரணமாக, சம்வத்சாரி தினத்தையொட்டி அக்டோபர் 19ஆம் தேதி அன்று, குஜராத் மாநிலத்தை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


விடுமுறை தின பட்டியல்:



  • அக்டோபர் 2: திங்கள் கிழமை (காந்தி ஜெயந்தி)

  • அக்டோபர் 12: ஞாயிற்று கிழமை

  • அக்டோபர் 14: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை

  • அக்டோபர் 15: ஞாயிற்று கிழமை

  • அக்டோபர் 18: கடி பிஹு (அசாம் மாநில வங்கிகளுக்கு விடுமுறை)

  • அக்டோபர் 19: சம்வத்சரி திருவிழா (குஜராத் மாநில வங்கிகளுக்கு விடுமுறை)

  • அக்டோபர் 21: துர்கா பூஜை (அகர்தலா, கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா மாநில வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

  • அக்டோபர் 22:  ஞாயிற்றுகிழமை

  • அக்டோபர் 23: மகா நவமி/ஆயத பூஜை 

  • அக்டோபர் 24: தசரா/விஜயதசமி/துர்கா பூஜை

  • அக்டோபர் 25: துர்கா பூஜை (காங்டாக் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

  • அக்டோபர் 26: துர்கா பூஜை (காங்டாக், ஜம்மு, ஸ்ரீநகர் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

  • அக்டோபர் 27: துர்கா பூஜை

  • அக்டோபர் 28: நான்காவது சனிக்கிழமை

  • அக்டோபர் 31 - சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் (அகமதாபாத்)


தமிழ்நாடு விடுமுறை பட்டியல்:


தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி வங்கிகளுக்கு கூடுதலாக 4 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 14ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, அக்டோபர் 24ஆம் தேதி விஜயதசமி, அக்டோபர் 28ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதத்திலும் தமிழகத்தில் இதே மாதிரி 4 நாட்கள் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




மேலும் படிக்க


2000 Rupees Note: 2000 ரூபாய் நோட் மாத்திட்டீங்களா? இன்னும் 5 நாள் தான் டைம்.. மாற்றாவிட்டால் என்ன நடக்கும்?