Bank Holidays January 2024: ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


வங்கிகள் விடுமுறை:


வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், ஜனவரி மாதத்தில் மட்டும் 16 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் விடுமுறை:


ஜனவரி மாதத்தின் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும்  புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். உதாரணமாக, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை/திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் வங்கிகள் மூடப்படும். ஆனால், அதே பண்டிகைக்காக மற்ற மாநிலங்களில் வங்கிகள் மூடப்படாது.


விடுமுறை தின பட்டியல்:



  • ஜனவரி 1: புத்தாண்டு (திங்கள் கிழமை)

  • ஜனவரி 7: ஞாயிற்று கிழமை

  • ஜனவரி 11: மிஸினரி தினம் (மிசோரம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

  • ஜனவரி 12: சுவாமி விவேகானந்தா ஜெயந்தி (மேற்கு வங்க வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

  • ஜனவரி 13: இரண்டாவது சனிக்கிழமை

  • ஜனவரி 14: ஞாயிற்று கிழமை

  • ஜனவரி 15: பொங்கல்/ திருவள்ளூர் தினம் (தமிழ்நாடு, ஆந்திர பிரதேச வங்கிகளுக்கு விடுமுறை)

  • ஜனவரி 16: துசு பூஜை (மேற்கு வங்கம், அசாம் வங்கிகளுக்கு விடுமுறை)

  • ஜனவரி 17: குரு கோவிந்த் சிங் ஜெயந்தி

  • ஜனவரி 21: ஞாயிற்று கிழமை

  • ஜனவரி 23: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி 

  • ஜனவரி 25: ஹிமாச்சல் பிரதேச  தினம் (ஹிமாச்சல் பிரதேச வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

  • ஜனவரி 26: குடியரசு தினம்

  • ஜனவரி 27: நான்காவது சனிக்கிழமை

  • ஜனவரி 28: ஞாயிற்று கிழமை

  • ஜனவரி 31: மீ-டேம்-மீ-ஃபை (அசாம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)


தமிழ்நாடு விடுமுறை பட்டியல்:


தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி கூடுதலாக நான்கு  நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், ஜனவரி 13ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, ஜனவரி 17ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதத்திலும் தமிழகத்தில் 2  நாட்கள் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.