இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமாக பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் உள்ளது, பஜாஜ் பைனான்ஸ் மூலமாக நாடு முழுவதும் பலரும் வீட்டு உபயோக பொருட்கள், மடிக்கணினிகள், செல்போன்கள் உள்பட பல பொருட்களை கடன் தவணை முறையில் வாங்கி வருகின்றனர். மேலும், பல்வேறு சேவைகளுக்காகவும் பஜாஜ் பைனான்ஸ் கடன் வழங்கி வருகிறது.
வைப்புத் தொகைகளுக்கு 8.85 சதவீத வட்டி:
இந்த நிலையில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் செயலி மற்றும் வலைதளம் வழியாக செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு (வைப்புத் தொகைகள்) 8.85% வரை பிரத்யேக வட்டி வீதங்களை வழங்கும் டிஜிட்டல் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மற்ற நிறுவனங்களும் உயர்த்துமா?
பஜாஜ் ஃபின்சர்வ் செயலி மற்றும் வலைதளத்தின் மீது 42 மாதங்கள் காலஅளவிற்கு புக்கிங் செய்யப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்காக மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆண்டுக்கு 8.85% வரை வட்டியினை பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்குகிறது. 60 ஆண்டுகள் வயதுக்கு குறைவான டெபாசிட்தாரர்கள், ஒரு ஆண்டுக்கு 8.60% வரை வட்டியினை ஈட்டலாம்.
42 மாதங்கள் காலஅளவிற்கு ரூ. 5 கோடி வரையிலான தொகையை புதிதாக டெபாசிட் செய்வது மற்றும் முதிர்ச்சியடையும் டெபாசிட்களை மீண்டும் புதுப்பிக்கும்போது, திருத்தியமைக்கப்பட்ட வட்டி வீதங்கள் இவைகளுக்கு பொருந்தும். பஜாஜ் நிறுவனம் தங்களது டிஜிட்டல் பிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு வட்டியை உயர்த்தியுள்ளதால் மற்ற நிறுவனங்களும் இதுபோல உயர்த்துமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Personal Loan Types: இதுக்கெல்லாம் பர்சனல் லோன் கிடைக்குமா? - இந்திய வங்கிகளில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன..!
மேலும் படிக்க: UPI Payment: யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை செய்றீங்களா? வந்தது நியூ ரூல்ஸ் - நோட் பண்ணிக்கோங்க மக்களே!