நாட்டில் நிலவி வரும் பணவீக்கமானது, பால் விலையையும் பாதித்துள்ளது. இந்நிலையில் அமுல் பால், லிட்டருக்கு விலை ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் பால் விலை லிட்டருக்கு ரூ.2  அதிகரித்துள்ளது.






பால் கொள்முதல் மற்றும் பிற உள்ளீட்டுச் செலவுகளின் அதிகரிப்பு காரணமாக அமுல் மற்றும் மதர் டெய்ரி ஆகிய பால் நிறுவனங்கள், விலையை அதிகரித்துள்ளன. நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்போவதாக இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


இப்போது, 500 மில்லி அமுல் கோல்ட் ₹ 31-க்கும் அமுல் தாசா ₹ 25-க்கும் மற்றும் அமுல் சக்தி ₹ 28-க்கும் சந்தைகளில் விற்கப்படுவதாக குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 






இது குறித்து அமுல் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கையில், பால் உற்பத்தி மற்றும் இயக்கத்திற்கான ஒட்டுமொத்த செலவு அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது.


கால்நடை தீவனச் செலவு மட்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த உள்ளீட்டுச் செலவுகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, எங்கள் உறுப்பினர் சங்கங்களும், விவசாயிகளின் விலையை முந்தைய ஆண்டை விட 8 முதல் 9 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன என்று தெரிவித்துள்ளார்










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண