உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது ஆக்ரா. இங்கு எல்.ஐ.சி. ஆபீசர் காலனி அமைந்துள்ளது. இந்த காலனிக்கு முன்னாள் ராணுவ வீரர் அகிலேஷ்சிங் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். அந்த பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிந்து வந்துள்ளது. இதைக் கண்ட அந்த பாதுகாவலர் அந்த நாய்களை அந்த பகுதியில் இருந்து துரத்த விரட்டியுள்ளார்.




இதைக்கண்ட இளம்பெண் ஒருவர் அவரிடம் தரக்குறைவாக பேசியதுடன் அவரை தான் கையில் வைத்திருந்த லத்தியால் சரமாரியாக தாக்கினார். மேலும், அந்த பெண் அவரைப் பற்றி பா.ஜ.க. எம்.பி.யும், விலங்குகள் நல ஆர்வலர் மேனகா காந்தியிடமும் புகார் அளிப்பதாக கூறி மிரட்டியுள்ளார்.






இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு அகிலேஷ் சிங் ஆக்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் அந்த இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க : Parsi New Year 2022: இன்று கொண்டாடப்படும் புத்தாண்டு.. பார்சி புத்தாண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படுகிறது?


அந்த இளம்பெண் பாதுகாவலரை தாக்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதற்கு விளக்கும் அளிக்கும் விதமாக அந்த இளம்பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தன்னை டிம்பி மகேந்திரு என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், தான் கடந்த 15 முதல் 18 ஆண்டுகள் விலங்குகள் நலனுக்காக பணிபுரிந்து வருவதாகவும் கூறினார்.




மேலும், எல்.ஐ.சி. ஆபீசர் காலனியில் இருந்து தனக்கு இரண்டு, மூன்று முறை அழைப்புகள் வந்ததாகவும், அதில் நாய்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அங்கு வசிப்பவர்கள் புகார் கூறினர். பின்னர், அந்த இளம்பெண், “ நான் நேரில் சென்று பார்த்தபோது அந்த காவலாளி கம்பை வைத்து நாய்களை தாக்கிக் கொண்டிருந்தார். அதை நான் தடுக்க முயன்றேன். ஆனால், அவர் என்னை அடிக்கத் தொடங்கினார். இதனால், நான் அவரது கம்பை பறித்துவிட்டேன். அவர் அவருடைய நண்பரை இதை வீடியோவாக எடுக்குமாறு கூறினார். அந்த காவலாளி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்” என்று அந்த பெண் அந்த வீடியோவில் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க : Watch Video : இதுவும் நரம்பு புடைக்கும் மொமெண்ட்தான்.. இந்தியர்களுக்கு ட்ரீட் கொடுத்த பாகிஸ்தான் இசைக்கலைஞர்


மேலும் படிக்க : சுதந்திர தின விழாவில் முதன்முறையாக இந்தியாவில் உருவான பீரங்கி மூலம் மரியாதை! 5 முக்கிய சிறப்பம்சங்கள்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண